• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • INDvsBAN | முதல் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் இந்திய அணி!

INDvsBAN | முதல் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் இந்திய அணி!

INDvBAN

INDvBAN

  • Share this:
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக ஷாட்மேன் இஸ்லாம், இம்ருல் கயஸ் களமிறங்கினர். இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா முதல் ஓவரை வீசினார். வங்கதேச அணி 15 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மா பந்துவீச்சில் 4 ரன்னில் இம்ருல் கயஸ் அவுட்டாகி வெளியேறினார்.

இதன் மூலம் பிங்க் பந்தில் விக்கெட் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை இஷாந்த் சர்மா பெற்றுள்ளார்.

இம்ருல் கயஸை அடுத்து களமிறங்கிய கேப்டன் மோமினுல் ஹக், முஹமது மிதுன், முஸ்தஃபிர் ரஹிம் மூவரும் டக்-அவுட்டாகி வெளியேறினர். பொறுமையாக விளையாடிய இஸ்லாம் 29 ரன்னில் அவுட்டாகினர்.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் அந்த அணி ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது. இறுதியாக வங்கதேச அணி 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய பந்துவீச்சாளர்களில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும், , ஷமி 2 விக்கெட்டைகளையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா களமிறங்கினார். போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார் மயங்க் அகர்வால்.

இந்திய அணி 26 ரன்கள் எடுத்திருந்த போது 14 ரன்களில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். இந்தூர் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்து அசத்திய அவர் பிங்க் பந்தில் விரைவில் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் சர்மாவும் 21 ரன்களில் அவுட்டானார்.

இந்திய அணி 43 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில் கேப்டன் விராட் கோலி - புஜாரா ஜோடி பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் புஜாரா 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 59 ரன்களுடனும் ரஹானே 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணியை விட இந்திய அணி 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: