ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சதத்தை தவறவிட்ட பந்த், ஸ்ரேயாஸ்.... டாக்கா டெஸ்டில் இந்திய அணி முன்னிலை

சதத்தை தவறவிட்ட பந்த், ஸ்ரேயாஸ்.... டாக்கா டெஸ்டில் இந்திய அணி முன்னிலை

Ind vs Ban

Ind vs Ban

Ind vs Ban | வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 87 ரன்கள் முன்னிலை பெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி டாக்கா மைதானத்தில் நேற்று (டிசம்பர் 22) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. டாக்காவில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி வங்கதேச அணியை 227 ரன்களில சுருட்டியது. உமேஷ் யாதவ், ரவிசந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். வங்கதேசம் சார்பில் மொமினுல் ஹக் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் ஏமாற்றமாகவே இருந்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 10 ரன்னிலும் சுப்மன் கில் 20 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த புஜாரா 24 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். விராட் கோலியும் 24 ரன்களில் நடையை கட்ட 94 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த பார்டனர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரிஷப் பந்த் தனது அதிரடியான ஆட்டத்தால் அரைசதம் கடந்தார். சதம் விளாசுவார் என்று எதிர்பார்த்து இருந்த ரிஷப் 93 ரன்களில் மெஹிடி பந்துவீச்சில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மறுபுறம் பந்த தவறவிட்ட சதத்தை ஸ்ரேயாஸ் அடிப்பார் என்று எதிர்பாரக்கப்பட்ட நிலையில் அவரும் 87 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

Also Read : ஸ்ரேயாஷ் ஐயர் கேட்சை பிடிக்க முயன்று மூக்குடைந்த வங்கதேச வீரர்... ரத்தம் வடிய மைதானத்தை விட்டு வெளியேறினார் - வீடியோ

இந்திய அணி இறுதியாக 314 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி முதல் இன்னங்சில் வங்கதேசத்தை விட 87 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இராண்டவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது. டாக்கா டெஸ்டிலும் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளதால் 2-வது டெஸ்டையும் வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

First published:

Tags: Ind vs Ban, India vs Bangladesh