பாகிஸ்தானை பழிவாங்க கவாஸ்கர் சொன்ன சூப்பர் ஐடியா!

India is going to lose by not playing against Pakistan in #WorldCup: #SunilGavaskar | பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம் என்று அனைவரும் கூறினால் அதுவே என்னுடைய முடிவு: சுனில் கவாஸ்கர். #INDvPAK

news18
Updated: February 21, 2019, 5:15 PM IST
பாகிஸ்தானை பழிவாங்க கவாஸ்கர் சொன்ன சூப்பர் ஐடியா!
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்.
news18
Updated: February 21, 2019, 5:15 PM IST
உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் இந்தியாவுக்குதான் நஷ்டம் ஏற்படும் என்பதால் வேறொரு சூப்பரான ஐடியாவை முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

புல்வாமா வெடிகொண்டு தாக்குதலுக்குப் பின், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் பெரிய விரிசல் விழுந்துள்ளது. இரு நாட்டு அரசியலைத் தாண்டி விளையாட்டுத்துறையிலும் இது எதிரொலித்து வருகிறது. அத்துடன், இந்திய மைதானங்களில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட்டன.

தற்போது, இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் உடன் விளையாடுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரும் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்ற கருத்தையே வலியுறுத்தி வருகின்றனர்.

BCCI, PCB, ICC, இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள். (AFP)


ஆனால், உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் இந்தியாவுக்குதான் பின்னடைவு ஏற்படும் என்றும், அதற்கு வேறு யோசனை உள்ளது என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “உலகக்கோப்பை அரையிறுதி, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை சந்திக்க வேண்டியிருந்தால் என்ன செய்வது இந்தியா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. இந்தியா விளையாடாவிட்டால் இரண்டு புள்ளிகள் கிடைக்காமல் போகும்,” என்றார்.

Sunil Gavaskar, சுனில் கவாஸ்கர்
முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். (Getty images)
Loading...
மேலும், “பாகிஸ்தானை உலகக்கோப்பையில் இருந்து நீக்க முடியாது. பாகிஸ்தானுக்கு எதிரான இரு நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் இருந்தாலே போதும். அவர்களுக்கு கடுமையான இழப்பு நிச்சயம். பல நாடுகள் விளையாடும் போட்டியில் விளையாடாவிட்டால் இந்தியாவுக்கு நஷ்டம் வரும்,” என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

இறுதியாக, “இந்திய அரசு என்ன சொல்கிறதோ அதே இறுதி முடிவு. பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம் என்று அனைவரும் கூறினால் அதுவே என்னுடைய முடிவும் கூட,” என்று சுனில் கவாஸ்கர் குறிபிட்டார்.

ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா திடீர் விலகல்... ஜடேஜாவுக்கு ஜாக்பாட்!

Also Watch...

First published: February 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...