India vs England| பட்டது போதும், இனி இந்திய வீரர்களுடன் வாக்குவாதம் இல்லை- அரண்டு போன ஜோ ரூட்

இனி வாக்குவாதம் இல்லை- ஜோ ரூட்

இந்திய அணியுடன் தேவையற்ற வார்த்தை மோதலில் களத்தில் ஈடுபடுவதில்லை என்று உறுதி மொழி எடுத்து விட்டோம், பாடம் கற்றுக் கொண்டோம் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்திய அணியுடன் தேவையற்ற வார்த்தை மோதலில் களத்தில் ஈடுபடுவதில்லை என்று உறுதி மொழி எடுத்து விட்டோம், பாடம் கற்றுக் கொண்டோம் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பும்ரா, ஷமி 20 ஓவர்கள் ஆடிய அதே தினத்தில் இங்கிலாந்து 50 ஓவர்களில் மடிந்து 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    நாளை புதனன்று 3வது டெஸ்ட் போட்டி ஹெடிங்லியில் தொடங்குகிறது.

    இந்நிலையில் ஜோ ரூட் கூறும்போது, “கிரிக்கெட்டைச் சுற்றி நாடகங்கள், மற்றும் அனைத்தும் உள்ளன. நாங்கள் எப்படி ஆட விரும்புகிறோமோ அந்த விதத்தில் ஆட்டத்தை ஆட விரும்புகிறோம். ஆகவே கவனச்சிதறல் ஏற்படுத்தும் தருணங்களை கவனித்து விலக விரும்புகிறோம். நேர்மையற்ற எந்த விதமான கவனச் சிதறல் நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம்.

    Also Read: தாலிபான்களிடமிருந்து தாலிபான்களுக்கு- அமெரிக்காவின் லட்சணம் இதுதான் - சீனா கடும் கேலி

    எங்களுக்கு நாங்களே உண்மையாக இருப்போம். தனிநபர்களாகவும் ஒரு அணியாகவும் உண்மையாக இருக்க வேண்டியுள்ளது. விராட் கோலியின் அணி அவர்கள் எப்படி ஆடுகின்றனரோ அப்படி ஆடட்டும், ஆனால் நாங்கள் களத்தில் நல்லபடியாகவே செயல்பட முடிவெடுத்துள்ளோம்.

    களத்தில் எப்போதும் வாய் வார்த்தைகள், மோதல்கள் இருக்கவே செய்யும். ஆனால் கடந்த டெஸ்ட்டிலிருந்து நல்ல பாடம் கற்றுக் கொண்டோம். அந்தப் போட்டியில் சில பகுதிகளை வேறு விதத்தில் கையாண்டிருக்கலாம். கேப்டனாக கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்திருக்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்னும் 3 போட்டிகள் இந்த பெரிய தொடரில் இருக்கின்றன, நாங்கள் வலுவாக மீண்டெழ விரும்புகிறோம். ஆகவே அனாவசியமான வார்த்தை மோதலில் ஈடுபடுவதை தவிர்ப்போம்.

    இவ்வாறு கூறினார் ஜோ ரூட்.

    லார்ட்ஸ் தோல்வி இங்கிலாந்துக்கு கொடுக்கப்பட்ட உளவியல் ரீதியான அடி இதிலிருந்து மீள்வது அவ்வளவு சுலபமல்ல என்று சுனில் கவாஸ்கர் கூறியதும் நினைவுகூரத்தக்கது.

    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வம்படியாக இங்கிலாந்து ஆடியதன் பலனை தோல்வி மூலம் அனுபவித்தனர். இங்கிலாந்து முன்னாள் வீரர்களும் ஜோ ரூட் மற்றும் இங்கிலாந்தின் செயல்களை கடுமையாக விமர்சித்தனர்.
    Published by:Muthukumar
    First published: