கவலைப் படாதீங்க, ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடுக்கு ஸ்விங் ஆகாது: தடுமாறும் இந்திய அணிக்கு கவாஸ்கர் ஆரூட ஆறுதல்

ஆண்டர்சன் - பிராட்.

ஒரு லெஜண்ட் பேட்ஸ்மென், இங்கிலாந்தில் ஸ்விங் ஆனால் எப்படி ஆட வேண்டும் என்று தடுமாறும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு ஆலோசனை வழங்காமல், வறண்ட பிட்ச்தான் இருக்கும் பிராட், ஆண்டர்சனுக்கு ஸ்விங் ஆகாது ஆகவே இந்திய அணி கவலைப்பட வேண்டாம் என்று கூறுவாரா?

  • Share this:
சுனில் கவாஸ்கர் இப்படித்தான் ஆலோனை வழங்கியுள்ளார். எப்போதும் இந்தியா ஜெயிக்க வேண்டும், மோசமாக ஆடினாலும் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்ற மனநிலையில் ஒரு நுட்பமிக்க பேட்ஸ்மென் இருக்க முடியுமா? அப்படித்தான் கூறுகிறார் சுனில் கவாஸ்கர். இந்தியா என்பதை கொஞ்சம் ஓரமாக வைத்து விட்டு கிரிக்கெட் ஆட்ட நுணுக்கங்களைப் பேசுவதுதான் சுனில் கவாஸ்கர் போன்ற லெஜண்ட்களுக்கு அழகு.

சரி! தி டெலிகிராப் பத்திரிகைக்கு அவர் என்னதான் கூறியிருக்கிறார் என்று பார்ப்போம்:

ஆகஸ்ட்-செப்டம்பரில் தொடர் நடப்பதால் இந்திய பேட்ஸ்மென்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பிட்ச்கள் வறண்டிருக்கும். வானிலையும் வறண்ட வானிலையாகவே இருக்கும். ஆகவே மிக்க மரியாதை கொடுத்து கூறுகிறேன் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் உணவு இடைவேளைக்கு முன் விக்கெட் எடுக்கவில்லை எனில் அதன்பிறகு திண்டாடுவார்கள்.

உலக சாம்பியன் இறுதியில் தோற்று ஏமாற்றத்துடன் தொடங்கியுள்ளோம், ஆனால் ஏமாற்றம் உறுதியையும் நம்பிக்கையும் அளித்தால் முடிவுகளை மாற்றி எழுத முடியும். இத்தகைய அணுகுமுறையை வளர்த்துக் கொண்டால் இந்த இங்கிலாந்து தொடரின் கோடைகாலத்தி இந்திய அணி தன்னுடைய சீசனாக மாற்ற முடியும்.

Also Read: விராட் கோலி ‘அங்க சேஷ்டைகளை’தவிர்க்க வேண்டும் கேன் வில்லியம்சன் போல் நுட்பமாக செயல்பட வேண்டும்- முன்னாள் பாக். வீரர் அட்வைஸ்

இவ்வாறு கூறுகிறார் சுனில் கவாஸ்கர்.

ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 900 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். ஆகஸ்ட்-செப்டம்பரில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் அவர்கள் திண்டாடியதாகத் தெரியவில்லை. பிறகு இந்திய பேட்ஸ்மென்களை ஒர்க் அவுட் செய்து எடுப்பதற்கு கொஞ்சம் ஸ்விங் உதவியிருந்தால் போதும் பெரிய ஸ்விங்கெல்லாம் தேவையில்லை.

ஏனெனில் சமீபத்தில் இந்தியாவில் போடப்படும் பிட்ச்கள் குழிப்பிட்ச்கள், நல்ல பிட்ச்கள் அல்ல, இதில் ஆடி ஆடி கால் நகர்த்தல் அடிப்படை உத்தி ஆகியவை பெரிய அளவில் சொதப்பலாக மாறி விட்டன. கவாஸ்கர் என்ன சொல்லியிருக்க வேண்டுமெனில் பிராட், ஆண்டர்சன் கவலைப்பட வேண்டியதில்லை இந்திய பேட்ஸ்மென்கள் தாங்கள் அவுட் ஆகும் விதங்களை நன்கு அறிந்தவர்கள் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்.
Published by:Muthukumar
First published: