• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • India in England 2021: ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரர் விவகாரம்: கங்குலி நழுவல்

India in England 2021: ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரர் விவகாரம்: கங்குலி நழுவல்

கங்குலி

கங்குலி

தேவ்தத் படிக்கல் மற்றும் பிரிதிவி ஷா ஆகியோரை இங்கிலாந்தில் உள்ள இந்திய அணி நிர்வாகம் கேட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து கங்குலி ஒருவரியில் பதிலளித்து நழுவியுள்ளார்.

  • Share this:
    இந்திய அணி தொடக்க வீரர் ஷுப்மன் கில் காயமடைந்ததையடுத்து அவருக்குப் பதிலாக மாற்று வீரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் பிரிதிவி ஷா ஆகியோரை இங்கிலாந்தில் உள்ள இந்திய அணி நிர்வாகம் கேட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து கங்குலி ஒருவரியில் பதிலளித்து நழுவியுள்ளார்.

    ஜூன் 28ம் தேதி இந்திய அணியின் மேனேஜர் கிரிஷ் டாங்ரே, ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரர்களாக தேவதத் படிக்கல், பிரிதிவி ஷா ஆகியோரைக் கேட்டு பிசிசிஐக்கு கோரிக்கை வைத்தார்.

    ஆனால் இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா இதற்குப் பதில் அளிக்காமல் இருந்து வருகிறார், இந்நிலையில் மாற்று வீரர்கள் கிடையாது மாயங்க் அகர்வால், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், அபிமன்யு ஈஸ்வரன், ஹனுமா விகாரி, புஜாராவை வைத்து ஆடட்டும் என்று விட்டு விட்டதாகத் தெரிகிறது.

    Also Read: England vs Pakistan | கேப்டன் பாபர் ஆசம் ‘டக்’ அவுட்; இங்கிலாந்து ‘பி’ அணியிடம் படுதோல்வி கண்ட பாகிஸ்தான்

    இந்நிலையில் தனது 49வது பிறந்த தினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கூறும்போது ஏதோ இங்கு அணித்தேர்வுக்குழு தன்னாட்சியுடன் சுயாதீனமாக செயல்படும் என்பது போல் ‘இது தேர்வாளர்கள் விவகாரம்’ என்று கூறி நழுவினார்.

    மேலும் கங்குலி கூறுகையில், “ஐபிஎல் போட்டி எமிரேட்சில் நடைபெறும் ஒரு பிரச்னையும் வராது, நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதே போல் உலகக்கோப்பை டி20 போட்டிகள் எமிரேட்சுக்கு மாற்றப்பட்டதை பற்றியும், ‘இது வருந்தத்தக்கதே, ஆனால் யாரும் வாழ்நாளில் இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

    ஏற்கெனவே கடந்த ஆண்டு உலகக்கோப்பை டி20 ரத்து செய்யப்பட்டது, இந்த முறையும் ரத்து ஆனால் அதனால் கிரிக்கெட்டுக்கு பேரிழப்பு. அதனால்தான் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று விட்டோம், என்றார் கங்குலி.

    கடந்த ஆண்டு கங்குலிக்கு மிதமான மாரடைப்பு ஏற்பட்டு பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டார், இது தொடர்பாகக் கூறும்போது, “நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், ஓர் ஆண்டு போய் விட்டது. இந்த கோவிட் காலத்தில் அமைதியாக இருக்க வேண்டும். நம்மை சுற்றியுள்ளவர்களை கவனிக்க வேண்டும், அவர்கள் நலனை நாம் பார்க்க வேண்டும்”, என்றார் கங்குலி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: