இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் களைகட்டியுள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, இரண்டாவது போட்டி வருகின்ற 22-ம் தேதி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக அரங்கேறவுள்ளது. அத்துடன், இந்தியாவில் நடைபெறும் முதல் பகல்இ ரவு டெஸ்ட் ஆகவும் அமையவுள்ளது. இதையொட்டி, மைதானம் முழுவதும் இளஞ்சிவப்பு வண்ணமாக மாறியுள்ளது. மேலும், மைதான பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெறும் நிலையில் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கி வருகின்றனர்.
மேலும், இந்தூர் மைதானத்தில் வங்கதேச வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, டி-20 தொடரை இழந்துள்ள நிலையில், டெஸ்ட் தொடரிலும் முதல் போட்டியில் தோல்வியுற்று பின்தங்கியுள்ளது. எனவே, அடுத்த போட்டியிலாவது இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் வங்கதேச வீரர்கள் முனைப்பு காட்டியுள்ளனர்.
இதனிடையே, கொல்கத்தா டெஸ்ட் போட்டிக்கான பிரத்யேக பந்து தயாரிப்பு பணி, உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படுகிறது. போட்டி நெருங்கி விட்டதால், பந்து தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.