ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Curry-munchers; உங்க கொடியை ஆட்டாதீங்க, சத்தம் போடாம உட்காரு- கூச்சலிட்ட ஆஸி. நிறவெறியாளர்களை மனம் மாற்றிய இந்திய ரசிகர்- அஸ்வின் நெகிழ்ச்சி

Curry-munchers; உங்க கொடியை ஆட்டாதீங்க, சத்தம் போடாம உட்காரு- கூச்சலிட்ட ஆஸி. நிறவெறியாளர்களை மனம் மாற்றிய இந்திய ரசிகர்- அஸ்வின் நெகிழ்ச்சி

சிட்னியில் ஆஸி. நிறவெறி ரசிகர்களை மனம் மாற்றிய இந்திய ரசிகர் கிருஷ்ணகுமார். | படம்: சமூக வலைத்தளம்.

சிட்னியில் ஆஸி. நிறவெறி ரசிகர்களை மனம் மாற்றிய இந்திய ரசிகர் கிருஷ்ணகுமார். | படம்: சமூக வலைத்தளம்.

கோபமும் வெறுப்பும் அடையவேண்டியதில்லை நட்பின் மூலமே நாம் நிறவெறியை முடிக்க முடியும், என்கிறார் கிருஷ்ண குமார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆஸ்திரேலியாவில் சிட்னி டெஸ்ட் மற்றும் பிரிஸ்பன் டெஸ்ட்களில் இந்திய அணியினர் மற்றும் இந்தியர்களை கடுமையாக நிறவெறி வசைபாடிய சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை ஆஸ்திரேலியாவில் உள்ள கிருஷ்ணகுமார் என்ற ரசிகர் பகிர்ந்துள்ளார். இதற்கு அஸ்வின் நன்றி தெரிவித்துப் பாராட்டியுள்ளார்.

அஸ்வின் தன் ட்விட்டர் பக்கத்தில், “உங்களை எப்படி தொடர்பு கொள்வது கிருஷ்ண குமார், வெல் டன்” என்று பாராட்டியுள்ளார்.

நிறவெறிக்கு பதிலடி கொடுக்க முயன்றதோடு நட்பார்த்த முறையில் இந்திய ரசிகர் கிருஷ்ண குமார் நிறவெறியாளர்களை மனம் மாற்றினார்.

Ashwin
அஸ்வின்

ரேசிஸம் பற்றி கிருஷ்ணகுமார்  கூறியது என்ன?

கிருஷ்ண குமார் இந்தியாவில் உலகக்கோப்பைப் போட்டிகள் நடைபெற்ற போது வந்து பார்த்திருக்கிறார், ஆஸ்திரேலியாவில் இருக்கும் இவர் இந்திய அணி பயணிக்கும் தொடர்களில் மைதானத்திற்கு நேரில் சென்று பார்க்கும் தீவிர கிரிக்கெட் ரசிகர்.

சிட்னியில் இந்தியா ஆட்டத்தைக் காண வந்த கிருஷ்ண குமார் அன்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் நடத்தையை கடுமையாக விமர்சித்தார். மிகவும் கீழ்த்தரமானது என்று கிழித்துத் தொங்க விட்டார். இவர் கால்பந்து ரசிகரும் கூட நைஜீரியாவில் வளர்ந்துள்ளார் இதனால் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நைஜீரியா அணியை ஆதரித்துள்ளார்.

இந்நிலையில் சிஎன்என் ஸ்போர்ட்ஸுக்காக அவர் கூறும்போது, என்னுடைய வாழ்நாளில் விளையாட்டில் இது போன்ற நிறவெறி வசைகளை நான் கேட்டதில்லை. சிட்னி டெஸ்ட்டின் 3ம் நாள் ஆட்டத்தில் அசிங்கமான நிறவெறியின் இன்னொரு முகத்தைக் கண்டேன்.

இந்திய வீரர்களை நோக்கி, ரசிகர்களை நோக்கி, "curry munchers" என்று அவர்கள் கூச்சலிட்டனர். மேலும் கெட்ட வார்த்தையினால் உங்க நாட்டுக் கொடியை ஆட்டறத நிறுத்துங்கடா, வாய மூடிட்டு பேசாம உக்காருங்கடா என்ற ரீதியில் கூச்சலிட்டனர்.

மைதான ஊழியர், பாதுகாப்பு அதிகாரிகள் காதில் இது விழாமல் போனது ஆச்சரியமே. இது அதிர்ச்சியளித்தது. ஆனால் 3ம் நாள் ஆட்டத்தில் யாரும் எந்த நடவடிக்கையையும் அவர்கள் மேல் எடுக்கவில்லை” என்றார் கிருஷ்ண குமார்.

இதனால் வெறுப்பில் 4ம் நாள் ஆட்டத்துக்கு கிருஷ்ண குமார் வரவில்லை, அன்றுதான் 6 ரசிகர்களை வெளியேற்றினர். இது எதனால் என்றால் எல்லைக்கோட்டருகே பீல்டிங் செய்த பும்ரா, சிராஜ் ஆகியோரை நிறவெறி வசைபாடினர் என்பதாலேயே.

“நான் வீட்டுக்கு வந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் நிறவெறி வசை குறித்து புகார் எழுப்பியதை அறிந்தேன். நான் கண்களை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் அன்று முழுதுமே அவர்கள் நிறவெறி வசையைச் செய்து கொண்டிருந்தனர்.

இதை இப்படியே விட்டு விடக்கூடாது என்று 5ம் நாள் மைதானத்துக்கு வந்தேன் அப்போது "Rivalry is good, racism is not," "No racism mate," "Brown inclusion matters #BIM" and "Cricket Australia -- more diversity please." (பகைமை நல்லது, நிறவெறி நல்லதல்ல, நிறவெறி வேண்டாம் சகா, பிரவுன் நிறத்தவரைச் சேர்த்துக் கொள்வது முக்கியம், கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்னும் பன்முகத்தன்மை தேவை) என்ற பதாகைகளை மைதானத்துக்குக் கொண்டு வந்து பதிலடி கொடுக்க நினைத்தேன்.

ஆனால் மைதான பாதுகாப்பு அதிகாரி, ‘இந்தப் பிரச்சனையைப் பேச வேண்டுமென்றால் எங்கிருந்து வந்தாயோ அங்கேயே போ என்றார். இதோடு அல்லாமல் இன்னொரு நபர் பாதுகாப்பு அதிகாரியிடம் நான் காரில் கொண்டு போய் அனைத்து பேனர்களையும் வைத்து வந்த பிறகு என்னை நிர்வாணமாக்கி சோதனை செய்து உள்ளே விட வேண்டும் என்று கூறியதையும் கேட்டேன். என்னை சோதித்தார்கள், அது 5 நிமிடம் வரை நீடித்தது. மெட்டல் டிடெக்டர் கொண்டு என்னை சோதித்தார்கள்.

மைதானத்துக்குள் என்னை சுற்றி பாதுகாப்பு வீரர்கள் என்னைக் கண்காணித்தனர். இது தேவையில்லாதது.

குளிர்ந்த பீர் மூலம் முடிவுக்கு வந்த நிறவெறி வசை:

கிருஷ்ண குமார் இதை முடித்து வைக்க வேறொரு முறையைத்தான் கையாண்டார், யார் நிறவெறி வசையில் ஈடுபட்டாரோ அவருடன் சேர்ந்து பீர் அருந்தினார், அவர்தான் பீர் வாங்கி வந்துள்ளார், நாங்கள் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம், அவ்வளவுதான் நிறவெறி வசை முடிவுக்கு வந்தது. நல்ல கிரிக்கெட்டுக்காக நாங்கள் இருவருமே உற்சாகமடைந்தோம்.

எனவே கோபமும் வெறுப்பும் அடையவேண்டியதில்லை நட்பின் மூலமே நாம் நிறவெறியை முடிக்க முடியும், என்கிறார் கிருஷ்ண குமார்.

கிருஷ்ணகுமாரை அஸ்வின் பாராட்டியுள்ளார்.

First published:

Tags: India vs Australia, Racism, Sydney