முகப்பு /செய்தி /விளையாட்டு / இன்றைய ஆட்டத்தை ஆடாமலேயே அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி! - ரசிகர்கள் உற்சாகம்!

இன்றைய ஆட்டத்தை ஆடாமலேயே அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி! - ரசிகர்கள் உற்சாகம்!

இந்திய அணி

இந்திய அணி

T20 world cup match | புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழைந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டி 20 உலகக்கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால், இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியானது.

அடிலைட்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களமிறங்கியது.

ஆனால், ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நெதர்லாந்தின் சிறப்பான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா ரன் எடுக்க முடியாமலும், விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தும் தடுமாறியது. இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், தென் ஆப்பிரிக்காவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி அபார வெற்றிபெற்றது.

ALSO READ | டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி பலாத்காரம் : இளம்பெண் கொடுத்த புகாரில் ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர்!

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், நெதர்லாந்து வெற்றிபெற்றதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழைந்தது.

First published:

Tags: Cricket, India Cricket, Netherlands, South Africa, T20, T20 World Cup