INDvWI | டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

ICC World Cup 2019 | India vs West Indies | நடப்புத் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையுடன் இந்திய அணி களம் காண்கிறது.

INDvWI | டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!
ICC World Cup 2019 | India vs West Indies | நடப்புத் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையுடன் இந்திய அணி களம் காண்கிறது.
  • News18
  • Last Updated: June 27, 2019, 2:37 PM IST
  • Share this:
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 34வது லீக் போட்டியில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகின்றன.

இந்தியாவை பொறுத்தவரை, இதுவரை ஆடிய 5 போட்டிகளில் நான்கில் வெற்றிபெற்று பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.


இதனால், நடப்புத் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையுடன் இன்று களம் காண்கிறது. பேட்டிங்கை பொறுத்தவரை, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி பலமாக உள்ளனர். இவர்களுடன், கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியாவும் கைகொடுத்தால் மேற்கிந்திய தீவுகள் நெருக்கடிக்கு உள்ளாகும்.

பந்துவீச்சில் பும்ராம், முகமது ஷமி, குல்தீப், சஹால் நம்பிக்கை அளிக்கின்றனர்.

அதேவேளையில், அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி, இதுவரை ஆடிய 6 போட்டிகளில், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. அதையடுத்து, தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.தற்போது, 3 புள்ளிகளுடன் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளதால் எஞ்சிய 3 ஆட்டங்களிலும் மேற்கிந்திய தீவுகள் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். எனவே, வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவை இன்று எதிர்கொள்கிறது.

இதில், தோல்வியை தழுவினால் அந்த அணி லீக் சுற்றோடு வெளியேற வேண்டியிருக்கும். கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், பிராத்வெய்ட், ஷாய் ஹோப் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர்.

இங்கு இதுவரை நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளன. எனவே, 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும் என கருதப்படுகிறது.
First published: June 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading