• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியா ஏன் பயப்படுறீங்க? நியாயமான பிட்சைப் போட்டே இங்கிலாந்தை வீழ்த்த முடியும்: ஷோயப் அக்தர்

இந்தியா ஏன் பயப்படுறீங்க? நியாயமான பிட்சைப் போட்டே இங்கிலாந்தை வீழ்த்த முடியும்: ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்.

ஷோயப் அக்தர்.

ஹோம் அட்வாண்டேஜ் என்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் அதற்காக இந்த மாதிரி உள்நாட்டுச் சாதக நிலைமையை நான் கேள்விப்பட்டதில்லை இது டூமச்.

  • Share this:
    சென்னை,அகமதாபாத் பிட்ச் விமர்சனக் குரல்களில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் ஷோயப் அக்தரும் இணைந்தார். நல்ல பிட்சைப் போட்டே இங்கிலாந்தை வீழ்த்த முடியும், பிறகு ஏன் இந்திய அணி இத்தகைய பிட்ச்களைப் போட வேண்டும் என்று கேட்கிறார் அக்தர்.

    யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:

    இந்தியா இப்போது இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற வெற்றியை விட பெரிய அணி என்றே கருதுகிறேன். நியாயமான பிட்சைப் போட்டு நியாயமாக ஆடினாலே இங்கிலாந்தை வீழ்த்த முடியும். இந்தியா பயப்பட வேண்டிய அவசியமில்லை , இந்தியா இத்தகைய பிட்ச்களை உருவாக்க வேண்டிய அவசியமேயில்லை.

    அடிலெய்டில் இந்தியாவுக்கு எதிராக பிட்ச் போடப்பட்டதா? அல்லது மெல்போர்னில் இந்தியாவுக்கு ஆதரவாகப் பிட்ச் போடப்பட்டதா? அங்கு எப்படி தொடரை இந்தியா வென்றது. நல்ல நிலைமைகளில் நல்ல பிட்ச்களில் ஆடி, ‘இங்க பாருங்க நாங்க உள்நாட்டுல மட்டும் இல்ல, வெளிநாட்டுலையும் நல்ல ஆடுவோம்’னு இந்தியா நிரூபித்தது.

    எனவே இந்தியா இதனை சிந்திக்க வேண்டும். இந்த வெற்றிகளை விட இந்திய அணி பெரிய அணிதான். உள்நாட்டுச் சாதகங்களை 3ம் நாள் 4ம் நாள் பிட்சில் எடுத்துக் கொள்வது நியாயமானதே?, ஆனால் முதல்பந்திலிருந்தே பிட்சில் மண் பெயர்ந்து வருவது நல்லதா? ஜோ ரூட்டெல்லாம் விக்கெட் எடுக்கிறார்.

    இத்தகைய பிட்ச்களில் டெஸ்ட் போட்டிகள் நடக்க வேண்டுமா? தேவையே இல்லை. கண்டபடி திரும்பும் பிட்ச்களில் 2 நாட்களில் ஆட்டம் முடிவது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

    ஹோம் அட்வாண்டேஜ் என்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் அதற்காக இந்த மாதிரி உள்நாட்டுச் சாதக நிலைமையை நான் கேள்விப்பட்டதில்லை இது டூமச்.

    இந்தியா 400 அடித்து இங்கிலாந்து 200 ரன்கள் எடுத்தால் நாம் சொல்லலாம் இங்கிலாந்து மோசமாக ஆடியது என்று. ஆனால் இந்தியாவே 145 ரன்களுக்க் ஆல் அவுட் ஆகிவிட்டதே.

    அடுத்த டெஸ்ட் போட்டிக்கு ஸ்போர்டிங் பிட்சை இந்தியா அமைக்க வேண்டும்., அப்படி அமைத்தாலே இந்தியாதான் வெற்றி பெறும், பிறகு ஏன் பயப்பட வேண்டும்?” என்றார் ஷோயப் அக்தர்.

    அக்தர் பாகிஸ்தானுக்காக 46 டெஸ்ட், 163 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: