ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்காது : ஜெய் ஷா அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்காது : ஜெய் ஷா அறிவிப்பு

ஜெ ஷா

ஜெ ஷா

Asiap Cup | 2005ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்திய அணி கடைசியாக சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  8வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இதில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் இந்த இரு நாட்டு அணிகளும் இதுபோல ஐசிசி தொடரில் மட்டுமே விளையாடி வருகிறது.

  2005ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்திய அணி கடைசியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் செயல்பட்டிருந்தார். அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடியது. அத்துடன் இரு அணிகளுக்கு இடையே எந்த ஒரு தொடரும் விளையாடமல் இருந்து வருகிறது.

  இதையும் படிங்க: பிசிசிஐயின் புதிய தலைவராக ரோஜர் பின்னி நியமனம்; பொருளாளராக பாஜக எம்எல்ஏ தேர்வு

  இந்த நிலையில் அடுத்தாண்டு ஆசிய கோப்பை தொடர் நடைபெறுகிறது.50 ஓவர் கிரிக்கெட் தொடராக இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் நிலையில் இந்த தொடரில் இந்திய அணியும், செல்லவுள்ளதாக பிசிசிஐ-யிடம் இருந்து தகவல் வந்தது. இதனால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

  இந்நிலையில் 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் பாதுகாப்பு மற்றும அரசின் அனுமதி இல்லாதது போன்றவை காரணமாக இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். பொதுவான  நாட்டில் ஆசிய கோப்பை நடைபெற்றால் இந்தியா பங்கேற்கும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் வாரியம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Asia cup cricket, BCCI, India vs Pakistan