ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

குல்தீப் ஹாட்ரிக்: 107 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி! பதிலடி கொடுத்த இந்திய அணி

குல்தீப் ஹாட்ரிக்: 107 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி! பதிலடி கொடுத்த இந்திய அணி

இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்தனர். இந்திய 50 ஓவர் முடிவில் 387 ரன்கள் குவித்தது.

388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்களாக ஈவின் லீவிஸும், ஷாய் ஹோப்பும் களமிறங்கினர். லீவிஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மேயர் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரோஷ்டன் சேஸும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர், நிக்கோலஸ் பூரானும் அதிரடியாக ஆடினார்.

மறுபுறம் ஹோப் நிதானமாக ஆடினார். பூரான் 47 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஹோப் 85 ரன்களில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் மூலம் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். அதேபோல, ஷமியும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது அணியின் வெற்றி உதவியது.

Also see:

First published:

Tags: Cricket, Indian team