Home /News /sports /

பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா! ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்திய இந்திய அணி

பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா! ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்திய இந்திய அணி

இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாண்டுவருகிறது. நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுள்ள நிலையில் இன்று பே ஓவல் மைதானத்தில் ஐந்தாவது டி-20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக மார்டின் கப்தில் மற்றும் கோலின் முன்ரோ களமிறங்கினர். கப்தில் 2 ரன்களிலும், முன்ரோ 15 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்ததாக களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் நிதானமாக ஆடினார். டாம் புரூஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், ரோஸ் டெய்லர் செய்ஃபெர்ட் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சேர்ந்த 99 ரன்களைச் சேர்ந்தனர். செய்ஃபெர்ட் 30 பந்துகளில் 50 ரன்களும், ரோஸ் டெய்லர் 47 பந்துகளில் 53 ரன்களும் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்த வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தநிலையில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சைனி, சர்துல் தாகுர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Also see:


 
Published by:Karthick S
First published:

Tags: India team

அடுத்த செய்தி