டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக கேன் வில்லியம்சன் விலகியுள்ளதால் டிம் சௌத்தி தலைமையில் நியூசிலாந்து இந்தத் தொடரில் விளையாடுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதனையடுத்து, நியூசிலாந்து அணியின் சார்பில் மார்டின் கப்தில், ரேர்ல் மிட்செல் களமிறங்கினர். மிட்செல் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஷ்வரின் பந்துவீச்சில் முதல் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து, மார்க் சாப்மேன் களமிறங்கினார். கப்தில், சாப்மன் இணை இந்திய வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இருவருரின் பார்டனர்ஷிப் 100 ரன்களைக் கடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாப்மன் 50 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய க்ளென் பிலிப்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க மறுபுறம் கப்தில் அதிரடியாக ஆடினார். 42 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரிகளுடன் 70 ரன்களைக் குவித்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 164 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் புவனேஷ்வர், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா களமிறங்கினர். ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் இணை 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சான்ட்னர் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யாகுமார் யாதவ் களமிறங்கினார். ரோஹித் சர்மா, சூர்யா குமார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சூர்யாகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 40 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்தநிலையில் சூர்யாகுமார் யாதவ் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் இறுதி ஓவரில் எட்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் பந்தில் வெங்கடேஷ் அய்யர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்த பந்தில் வெங்கடேஷ் அய்யர் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, அக்ஷர் பட்டேல் களமிறங்கி முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார். அடுத்து, ரிஷப் பன்ட் பவுண்டரி அடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.