பங்களாதேஷை வீழ்த்தி 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இந்திய அணி

இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் 45 லீக், 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்தது.

    அடுத்ததாக களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக லிடான் தாஸும், சௌம்யா சர்காரும் களமிறங்கினர். சௌம்யா 25 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து முஷிஃபிகுர் ரஹீம் களமிறங்கினார்.

    ரஹீமும், லிடான் தாஸும் நிதானமாக ரன் சேர்த்தனர். தாஸ் 73 ரன்களிலும், ரஹூம் 90 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பங்களாதேஷ் அணி 49.3 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம், இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    Also see:

    Published by:Karthick S
    First published: