ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஜிம்பாவே அணிக்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயத்தது இந்திய அணி.. சூர்யகுமார் யாதவ் அபார அரைசதம்!

ஜிம்பாவே அணிக்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயத்தது இந்திய அணி.. சூர்யகுமார் யாதவ் அபார அரைசதம்!

சூர்ய குமார் யாதவ்

சூர்ய குமார் யாதவ்

சூர்ய குமார் யாதவ் - ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaAustraliaAustralia

  இந்தியா - ஜிம்பாவே அணிகள் மோதும் இன்றைய டி20 உலக கோப்பை ஆட்டத்தில், இந்தியா 187 ரன்களை ஜிம்பாவே அணிக்கு இலக்காக நிர்ணயத்துள்ளது.

  டி 20 உலககோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று இன்றோடு நிறைவடைகிறது. ஏற்கனவே இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாவே அணியுடன் மோதுகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். இந்திய அணியில், தினேஷ் கார்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்.

  ரோஹித் ஷர்மாவும், கே.எல்.ராகுலும் ஓப்பனர்களாக இறங்கினர். 15 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரோஹித் ஷர்மா தனது விக்கெட்டை இழந்தார். பிறகு களமிறங்கிய விராட் கோலியுடன் கே.எல்.ராகுல் பாட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினர். 87 ரன்கள் இருந்த போது, கோலி தனது விக்கெட்டை இழந்தார்.

  அரை சதம் கடந்த ராகுலும் அடுத்த பந்திலேயே தனது விக்கட்டை இழக்க, இந்திய அணி, 95 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்றைய ஆட்டத்தில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட்-ம், 3 ரன்களில் வெளியேற, சூர்ய குமார் யாதவ் - ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.

  14 ஓவரில் 103 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, சூர்ய குமார் யாடவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடியால், 20 ஓவர்களுக்கு 186 ரன்களை எடுத்தது.

  ஹர்திக் பாண்டியா 18 ரன்களில் வெளியேற, சூர்ய குமார் யாதவ் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார். இறுதிவரை சூர்ய குமார் யாதவ் ஆட்டமிழக்காமல், 25 பந்துகளில், 61 ரன்களை எடுத்தார், இதன் மூலம் இந்திய அணி 186 ரன்களை எடுத்து 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது,

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Indian cricket team, T20 World Cup, Zimbabwe