அரை சதம் அடித்த ஜடேஜா.... இந்திய அணி 497 ரன்களுக்கு டிக்ளேர்

- News18
- Last Updated: October 20, 2019, 2:58 PM IST
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், ரோகித் சர்மாவும் களம் கண்டனர். இதில் மயங்க் அகர்வால் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து புஜாராவும் ரன் ஏதும் எடுக்காமல் ரபாடா பந்துவீச்சில் வீழ்ந்தார். கடந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி 12 ரன்களில் அன்ரிச் பந்துவீச்சில் வெளியேறினார்.
இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த நிலையில் ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 132 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மோசமான வானிலை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 2-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த ரஹானே 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் ரஹானே அடித்த 11-வது சதம் இதுவாகும்.
ரஹானே-ரோஹித் சர்மா ஜோடி 4-வது விக்கெட்டிற்கு 267 ரன்கள் சேர்த்து சாதனை படைத்துள்ளது. தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக 4-வது விக்கெட்டிற்கு 178 ரன்கள் சேர்க்கப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது.
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் முதல் இரட்டை சதம் இதுவாகும். ரோஹித் சர்மா 212 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.இதையடுத்து இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்களை எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், ரோகித் சர்மாவும் களம் கண்டனர். இதில் மயங்க் அகர்வால் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து புஜாராவும் ரன் ஏதும் எடுக்காமல் ரபாடா பந்துவீச்சில் வீழ்ந்தார். கடந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி 12 ரன்களில் அன்ரிச் பந்துவீச்சில் வெளியேறினார்.
இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த நிலையில் ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 132 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
ரஹானே-ரோஹித் சர்மா ஜோடி 4-வது விக்கெட்டிற்கு 267 ரன்கள் சேர்த்து சாதனை படைத்துள்ளது. தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக 4-வது விக்கெட்டிற்கு 178 ரன்கள் சேர்க்கப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது.
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் முதல் இரட்டை சதம் இதுவாகும். ரோஹித் சர்மா 212 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.இதையடுத்து இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்களை எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.
Innings Break!
That's it from the India innings as the Captain calls for a declaration.#TeamIndia 497/9d pic.twitter.com/Zva8hFaQaM
— BCCI (@BCCI) October 20, 2019