INDvSA 2nd Test | 254 ரன்கள் விளாசிய விராட் கோலி! 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த இந்தியா

ரஹானே அவுட்டானதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். பொறுப்புடன் விளையாடி கோலி 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

INDvSA 2nd Test | 254 ரன்கள் விளாசிய விராட் கோலி! 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த இந்தியா
ரஹானே அவுட்டானதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். பொறுப்புடன் விளையாடி கோலி 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
  • News18
  • Last Updated: October 11, 2019, 3:52 PM IST
  • Share this:
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 601 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும் ரஹானே 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் கோலி - ரஹானே பொறுமையுடன் விளையாடினர். கேப்டன் கோலி டெஸ்டில் 26வது சதத்தை பதிவு செய்தார். ரஹானே 59 ரன்கள் எடுத்திருந்த போது மஹாராஜ் பந்துவீச்சில் அவுட்டாகினார்.


ரஹானே அவுட்டானதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். பொறுப்புடன் விளையாடி கோலி 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன்பின் விராட் கோலியும், ஜடேஜாவும் டி20 கிரிக்கெட் போல் சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசினர்.



தென்னாப்பிரிக்கா பவுலர்களால் இவர்களின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். நாலாபுறம் பந்தை சிதறவிட்ட இந்த ஜோடி 3வது சீசன் ஆரம்பித்த 9 ஓவர்களில் 100 ரன்கள் அடித்தனர்.

இறுதியாக ஜடேஜா 91 ரன்கள் எடுத்திருந்த போது முத்துசாமி பந்துவீச்சில் அவுட்டானார். இதையடுத்து முதல் இன்னிங்சை டிக்ளர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார். இந்திய அணி 601 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது. கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அதிகப்பட்ச ஸ்கோர் இதுவாகும்.
First published: October 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading