ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த 2 ஆண்டுகளுக்கான சுற்றுப்பயண அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த 2 ஆண்டுகளுக்கான சுற்றுப்பயண அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

கொரோனா காரணமாக கடந்த ஓராண்டாக கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விளையாட்டும் நடைபெறாமல் தடைபட்டது. இந்நிலையில் ஒராண்டு ஓய்வுக்கு பிறகு சுறுசுறுப்புடன் களமிறங்கி இந்திய அணி வெற்றிகளை குவித்து வருகிறது. இதனிடையே வரும் 2023 ஆண்டு முதல் இந்திய அணி விளையாட இருக்கும் போட்டி தொடர்பான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இங்கிலாந்து அணியுடனான தொடருக்கு பின்னர் 2021 முதல் 2023 வரை இந்திய அணியின் போட்டிகள் குறித்த அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஓய்வே இல்லாமல் முழுமூச்சாக தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருப்பது தெரியவந்துள்ளது.

  இந்திய அணி தான் உலகிலேயே அதிகம் பேர் பின் தொடரும் அணியாகவும், அதிகம் விமர்சனங்களுக்கு ஆளாகும் அணியாகவும் விளங்கி வருகிறது. இந்தியாவில் கிரிக்கெட் ஒரு உணர்வாக பார்க்கப்படுகிறது. தங்களின் நட்சத்திர வீரர்கள் சோபிக்கத் தவறினால் ரசிகர்கள் துவண்டு போவதையும் நம்மால் பார்க்க முடியும். அதே நேரத்தில் தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுவதையும் பார்க்க முடியும். இதற்கு சிறந்த உதாரணம் தான் அண்மையில் நடைபெற்ற ஆஸி அணியுடனான தொடர். இத்தொடருக்கு பின்னர் இந்தியாவுக்கு வருகை தந்தை இந்திய வீரர்களை ரசிகர்கள் கொண்டாடியதை சில வெளிநாட்டு வீரர்கள் பொறாமையுடன் பார்த்து சமூக வலைத்தளங்களில் சிலாகித்ததும் அரங்கேறியது.

  கொரோனா காரணமாக கடந்த ஓராண்டாக கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விளையாட்டும் நடைபெறாமல் தடைபட்டது. இந்நிலையில் ஒராண்டு ஓய்வுக்கு பிறகு சுறுசுறுப்புடன் களமிறங்கி இந்திய அணி வெற்றிகளை குவித்து வருகிறது. இதனிடையே வரும் 2023 ஆண்டு முதல் இந்திய அணி விளையாட இருக்கும் போட்டி தொடர்பான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

  இந்திய கிரிக்கெட் அணி

  2021-ல் இந்திய அணியின் அட்டவணை: India’s schedule in 2021

  April to May 2021

  ஐபிஎல்

  June to July 2021

  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ஜூன்)

  இந்தியா vs இலங்கை ( 3 ஒரு நாள், 5 டி20 போட்டிகள்)

  ஆசிய கோப்பை

  July to September 2021

  இந்தியா vs இங்கிலாந்து ( 5 டெஸ்ட்)

  October 2021

  இந்தியா vs தென் ஆப்பிரிக்கா ( 3 ஒரு நாள், 5 டி20 போட்டிகள்)

  October to November 2021

  ஐசிசி டி20 உலக கோப்பை

  November to December 2021

  இந்தியா vs நியூசிலாந்து ( 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள்)

  இந்தியா vs தென் ஆப்பிரிக்கா ( 3 டெஸ்ட், 3 டி20 போட்டிகள்)

  2022-ல் இந்திய அணியின் அட்டவணை: Indian Cricket Team Schedule for 2022

  January to March 2022

  இந்தியா vs மேற்கு இந்திய தீவுகள் (3 ஒரு நாள், 3 டி20 போட்டிகள்)

  இந்தியா vs இலங்கை (3 டெஸ்ட், 3 டி20 போட்டிகள்)

  April to May 2022

  ஐபிஎல் 2022 தொடர்

  June 2022

  எதுவும் இல்லை

  July to August 2022

  இந்தியா vs இங்கிலாந்து (3 ஒரு நாள், 3 டி20 போட்டிகள்)

  இந்தியா vs மேற்கு இந்திய தீவுகள் (3 ஒரு நாள், 3 டி20 போட்டிகள்)

  September 2022

  ஆசிய கோப்பை (போட்டி நடைபெறும் இடம் முடிவு செய்யப்படவில்லை)

  October to November 2022

  ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் (ஆஸ்திரேலியா)

  November to December 2022

  இந்தியா vs வங்கதேசம் (2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள்)

  இந்தியா vs இலங்கை (5 ஒரு நாள்)

  2023-ல் இந்திய அணியின் அட்டவணை: India’s schedule in 2023

  January 2023

  இந்தியா vs நியூசிலாந்து ( 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகள்)

  February to March 2023

  இந்தியா vs ஆஸ்திரேலியா (4 டெஸ்ட், 3 ஒரு நாள் & 3 டி20 போட்டிகள்)

  Published by:Arun
  First published:

  Tags: Cricket, Team India