டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்திய அணி!

இந்திய அணியில், மகேந்திர சிங் தோனி ராணுவ பயிற்சிக்கு சென்றுவிட்டதால் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த், அணியில் இடம்பெற்றுள்ளார்.

news18
Updated: August 3, 2019, 7:50 PM IST
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்திய அணி!
கோலி
news18
Updated: August 3, 2019, 7:50 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது. இந்தப் போட்டிகள், கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்க கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ளன.

இன்று முதலாவது 20 ஓவர் போட்டி, அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் உள்ள லாடர்கில்லில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில், மகேந்திர சிங் தோனி ராணுவ பயிற்சிக்கு சென்றுவிட்டதால் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த், அணியில் இடம்பெற்றுள்ளார்.


மேற்கு இந்திய தீவுகள் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக ஜாஸன் முகமது பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதினொரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணியும் தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.

Also see:

First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...