நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டி! பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்திய அணி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் போட்டிகள் பிப்.6 முதல் நடைபெற்று வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டி! பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்திய அணி
நியூசிலாந்து அணி
  • News18
  • Last Updated: February 11, 2019, 11:56 AM IST
  • Share this:
நியூசிலாந்துக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரை 4-1 என இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்தியா சாதித்தது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் போட்டிகள் பிப்.6 முதல் நடைபெற்று வருகிறது. நடைபெற்று முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன.


இன்று நடைபெறும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். மூன்றாவது போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் யஸ்வேந்திரா சகாலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம்பெறுகிறார்.

Also see:

First published: February 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்