ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்குமா? கேப்டன் ரோகித் சர்மா சொன்ன கூல் பதில்

பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்குமா? கேப்டன் ரோகித் சர்மா சொன்ன கூல் பதில்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து ரோகித் சர்மா.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து ரோகித் சர்மா.

நாளைய போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்வது பற்றி மட்டுமே தற்போது யோசித்து கொண்டு இருப்பதாக ரோகித் சர்மா தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அடுத்தாண்டு நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து பிசிசிஐ தான் முடிவு செய்யும் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

  ஆஸ்திரேலியாவில்  நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா நாளை பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ‘ ஐசிசி ஆட்டங்களில் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புகொள்கிறேன். 9 ஆண்டுகளாக ஐசிசி போட்டியில் நாங்கள் வெற்றி பெறவில்லை இது ஏமாற்றமே’ என தெரிவித்தார்.

  ஒவ்வொரு ஆட்டத்திலும் தேவைப்பட்டால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் ஒன்று அல்லது இரண்டு மாற்றங்களை செய்ய தயங்கவில்லை. தற்போதைய ஆட்ட நிலை மற்றும் செயல்படும் தன்மையை பொறுத்து தேர்வு நடைபெறுவதாக ரோகித் சர்மா கூறினார்.

  இதையும் படிங்க: தமிழகத்தில் தீபாவளி அன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை - வானிலை ஆய்வுமையம்

  ஆசிய கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வது பற்றி பிசிசிஐ தான் முடிவு செய்யும் என்றும் பாகிஸ்தான் செல்வது தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என்றும் நாளைய போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்வது பற்றி மட்டுமே தற்போது யோசித்து கொண்டிருக்கிறோம் என்றும் பாகிஸ்தான் அணியில் பலம் வாய்ந்த பந்துவீச்சாளர் இருந்தாலும் இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருப்பதால் கவலை இல்லை என தெரிவித்தார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BCCI, Rohit sharma, T20 World Cup