ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும்: கொட்டும் மீம் மழை

இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும்: கொட்டும் மீம் மழை

இந்திய அணியை கிண்டல் செய்து கொட்டும் மீம் மழை

இந்திய அணியை கிண்டல் செய்து கொட்டும் மீம் மழை

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நேற்று உலகக்கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை நியூசிலாந்து அணி மிகவும் சவுகரியமாக, தொழில்நேர்த்தியுடன் தோற்கடித்து அரையிறுதியில் இங்கிலாந்தை சந்திக்கிறது. ஆப்கானிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான்.

  இத்தகைய ரசிகர்களுக்கு ஒன்று புரிவதில்லை நேற்று ஆப்கானிஸ்தான் ஜெயித்து இன்று இந்தியா ரன் ரேட்டை நமீபியாவை வீழ்த்தி உயர்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டால், இரண்டு விதங்களில் அது பெரிய அநீதியாகாதா? ஒன்று இந்திய அணி நியூசிலாந்திடம் செம உதை வாங்கிய அணி ஆனால் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தை வெல்கிறது என்றால் இந்தியாவைப் பந்தாடிய நியூசியும் அரையிறுதிக்குச் செல்லாது, ஆனால் அதே நியூசியை வீழ்த்திய ஆப்கான் அணியும் அரையிறுதிக்குச் செல்லாது இந்த இரட்டை அநீதியை ரன் ரேட் செய்கிறது.

  இந்த நெட் ரன் ரேட்டையே முதலில் தூக்க வேண்டும். இதில் விழுந்த விக்கெட்டுகளெல்லாம் கணக்கு கிடையாது. ஒரு அணி எடுக்கும் ரன்கள் எவ்வளவு ஓவரில் எடுத்தது என்ற எண்ணிக்கையை எவ்வளவு ரன்களை எவ்வளவு ஓவர்களில் கொடுத்தது என்ற எண்ணிக்கையால் கழித்து நெட் ரன் ரேட் கணக்கிடப்படுகிறது. உதாரணத்துக்கு இந்தியா 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுக்கிறது என்றால் எதிரணி 15 ஓவர்களில் 161 எடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்தியாவின் 8 ரன் ரேட், கொடுத்தது 10 ரன்களுக்கும் மேல் எனவே 2 புள்ளி சம்திங் நெட் ரன் ரேட் ஆகும் இது வென்ற அணிக்குச் செல்லும் இந்திய அணிக்கு மைனஸில் செல்லும்.

  இதில் விக்கெட்டுகள் கணக்கில் வராது, இப்போது ஒரு முக்கியக் கட்டத்தில் நெட் ரன் ரேட்தான் தகுதி பெறுவதை தீர்மானிக்கும் என்றால். ஒரு அணி 20 ஒவர் ஆடி 100 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம், மற்றொரு அணி 10 ஓவர்களில் 101/9 என்று ஜெயிக்கிறது என்றால் இங்கு 9 விக்கெட்டுகள் மறைந்துவிடும் யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற இந்தப் போட்டி நெட் ரன் ரேட்டில் ஒரு அணிக்குச் சாதகமாகப் போகும். எனவே இரு அணிகள் சம புள்ளிகளுடன் உள்ளதா அந்த இரு அணிகளுக்கும் இன்னொரு நாக்-அவுட் போட்டி வைத்து யார் அரையிறுதியோ காலிறுதியோ போவது என்பதை தீர்மானிக்க வேண்டும்.

  இரு பிரிவிலும் இந்த உலகக்கோப்பையை எடுத்துக் கொண்டால் இங்கிலாந்து, பாகிஸ்தான் டாப் அணிகள் இவர்கள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டனர். தேவை இன்னும் 2 அணிகள் இப்போது எந்தப் பிரிவில் 3 அணிகள் ஒரே புள்ளியில் இருக்கிறது என்றால் இன்னொரு போட்டியை இந்த அணிகளுக்குள் நடத்தி விட வேண்டியதுதான், அது நாக் அவுட், தோற்கும் அணி வெளியேற வேண்டியதுதான். இப்படி வைத்தால் கோளாறு நடக்காது. நேற்று நியூசிலாந்து ஆப்கானிடம் தோற்றிருந்தால் இந்தியா தகுதி பெற்று விடும் ஆனால் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்தும் வெளியேறும் நியூசிலாந்தை வீழ்த்திய ஆப்கானும் வெளியேறும் இது பெரிய அநீதியாகும்.

  இந்நிலையில் இந்தியா இன்னும் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்ற கிண்டல் கேலி மீம்கள் இணையதளங்களில் வளைய வந்துள்ளன அதை நீங்களே பாருங்கள்:

  இந்தியா இன்று நமீபியா அணியை எதிர்கொள்கிறது, ரவிசாஸ்திரி-விராட் கோலி கூட்டணிக்கு பிரியா விடை போட்டியாகவே இது பார்க்கப்படுகிறது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Captain Virat Kohli, Ravi Shastri, T20 World Cup