ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

2022-ல் அதிக வெற்றிகள்: டி20-ல் பாகிஸ்தானை முறியடித்து புதிய சாதனை படைத்தது இந்திய அணி!

2022-ல் அதிக வெற்றிகள்: டி20-ல் பாகிஸ்தானை முறியடித்து புதிய சாதனை படைத்தது இந்திய அணி!

இந்திய அணி

இந்திய அணி

2021 முதல் 14 முறை இலக்கை விரட்டியதில் இந்திய அணி 13 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதேபோல் 2022ம் ஆண்டில் இந்திய அணி 21 வெற்றிகளை டி20 சர்வதேசப் போட்டிகளில் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Hyderabad

ஐதராபாத்தில் நடந்த டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை த்ரில் சேஸிங்கில் வீழ்த்தி தொடரை 2-1 என்று கைப்பற்றியதையடுத்து இந்திய அணி 2022 டி20 சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்து அதிக வெற்றிகளை இதுவரை பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து கேமரூன் கிரீன் (52), டிம் டேவிட் (54) சாத்துமுறையில் 187 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயிக்க இந்திய அணி சூரியகுமார்யாதவின் அதிரடி அரைசதம், விராட் கோலியின் பொறுப்பான அரைசதத்தினால் ஒரு பந்து மீதம் வைத்து அபார வெற்றி பெற்றது.

2021 முதல் 14 முறை இலக்கை விரட்டியதில் இந்திய அணி 13 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதேபோல் 2022ம் ஆண்டில் இந்திய அணி 21 வெற்றிகளை டி20 சர்வதேசப் போட்டிகளில் பெற்றுள்ளது. இது 2021-ல் பாகிஸ்தான் பெற்ற அதிகபட்சமான 20 போட்டிகள் வெற்றிச்சாதனையை முறியடித்துள்ளது.

கிரீன் ஆஸ்திரேலியாவை ஒரு ஃப்ளையர் தொடக்கத்துக்கு இட்டுச் சென்றார். கிரீன் தனது அரை சதத்தை வெறும் 19 பந்துகளில் எட்டினார் - இது இந்தியாவுக்கு எதிரான சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா, ஸ்டீவ் ஸ்மித் (9) மற்றும் கிளென் மேக்ஸ்வெல் (6) ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. டேவிட் கடைசியாக அடித்ததன் மூலம் ஆஸ்திரேலியா  186/7 என்ற கண்ணியமான ஸ்கோரை எட்ட உதவியது. இந்திய அணியின் ராகுல்,ரோஹித் சர்மா இருவரையும் ஆஸ்திரேலியா பவுன்சரில் காலி செய்ய 30/2 என்று ஆன பிறகு இந்தியாவின் ரன் சேஸ் கடினமான ஒன்றாக மாறியது.

ALSO READ | அந்த கடைசி ஓவர் சிக்ஸ் முக்கியமானது; இன்னும் முன்னரே முடித்திருக்க வேண்டும் - கோலி அட்வைஸ்!

விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையேயான ஒரு சத கூட்டணி இந்தியாவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தது. ஆனால் 14வது ஓவரில் சூரியகுமார் ஆட்டமிழந்ததால், பணி கடினமாக மாறியது.

டேனியல் சாம்ஸ் வீசிய கடைசி ஓவரில் வெற்றி பெற 11 ரன்கள் இருந்த நிலையில், 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த விராட் கோலி, முதல் பந்தில் ஒரு சிக்சர் அடிக்க, ஐந்து பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும், கோலி அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார், ஆனால் ஹர்திக் பாண்டியா பினிஷ் செய்து வைத்தார். ஹர்திக் பாண்டியாவின் எட்ஜ் பவுண்டரியினால் இந்தியா தொடரை 2-1 என்று வென்றது.

Published by:Anupriyam K
First published:

Tags: Cricket, T20