ஐதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள இங்கிலாந்தைக் காட்டிலும் 7 புள்ளிகள் முன்னிலை பெற்று முதல் இடம் பிடித்தது இந்தியா.
சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலியின் அரை சதங்கள் இறுதி ஓவர் த்ரில்லர் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தர டி20 அணி தரவரிசைப் புள்ளிகளில் ஒட்டுமொத்தமாக 268 ஆக அதிகரிக்க உதவியது, இது இங்கிலாந்தை விட ஏழு புள்ளிகள் (261 புள்ளிகள்) அதிகம்.
இங்கிலாந்து அணி தன் 4வது டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி 12 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையிலும் ஹாரிஸ் ராவுஃப்பின் அட்டகாசமான 19வது ஓவரில் வெறும் 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழக்க, கடைசி ஓவரில் மீதமிருக்கும் விக்கெட்டும் விழ இங்கிலாந்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது, இதனையடுத்து இந்தியா தரவரிசையில் இங்கிலாந்தைக் காட்டிலும் 7 புள்ளிகள் முன்னிலை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.
மேலும் படிக்க : இந்த அணிகள் தான் டி20 உலக கோப்பைக்கு முன்னேறும்.. அலெக்ஸ் ஹேல்ஸ் கணிப்பு..
பாகிஸ்தான் தற்போது 258 புள்ளிகளுடன் அணி தரவரிசையில் தென்னாப்பிரிக்காவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது, ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்திற்கு உயரலாம்.
ஐசிசியின் கூற்றுப்படி, பாகிஸ்தானுக்கு எதிராக மீதமுள்ள போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் தரவரிசையில் இங்கிலாந்து இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும், அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியாவுடன் புதன்கிழமை தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதால் அந்த அணியும் தங்கள் தரவரிசை நிலையை உயர்த்தப் பாடுபடும் என்று தெரிகிறது.
நியூசிலாந்து T20I அணி தரவரிசையில் மொத்தம் 252 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது, கேன் வில்லியம்சனின் அணியானது டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு சற்று முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை சொந்த மண்ணில் முத்தரப்பு தொடரை நடத்தும் போது தரவரிசையில் உயர வாய்ப்புள்ளது.
ஆறாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தொடரை இழந்ததைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக 250 புள்ளிகளைப் பெற்றுள்ளது. தற்போதைய டி 20 உலகக் கோப்பை சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக இன்னும் ஆறு போட்டிகளில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, ICC Ranking, Indian cricket team, T20