ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சபாஷ் ரோஹித் சர்மா! டி20-யில் இந்தியா நம்பர் 1

சபாஷ் ரோஹித் சர்மா! டி20-யில் இந்தியா நம்பர் 1

இந்தியா டி20 தரவரிசையில் நம்பர் 1

இந்தியா டி20 தரவரிசையில் நம்பர் 1

வெஸ்ட் இண்டீசை 3-0 என்ற கணக்கில் க்ளீன் ஸ்வீப் செய்து, தொடர்ந்து ஒன்பதாவது டி20ஐ வென்றது இந்தியா ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்துக்குள் நுழைந்தது.

 • Cricketnext
 • 2 minute read
 • Last Updated :

  கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கிந்தியத் தீவுகளை 3-0 என்ற கணக்கில் க்ளீன் ஸ்வீப் செய்ததன் மூலம் இந்தியா டி20 தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி இப்போது டி20 போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று கடந்த ஆண்டு உலகக் கோப்பை நீட்சியாகத் தொடர்ந்து அவர்கள் சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர்களை தொடர்ச்சியாக ஸ்வீப் செய்து முடித்தனர்.

  சூர்யகுமார் யாதவின் அரைசதத்தால் இந்தியா ஈடன் கார்டனில் 184/5 என்ற சவாலான ரன்களை எடுத்தது. பின்னர் ஹர்ஷல் படேல் 3/22 எடுத்து மேற்கிந்திய தீவுகளை 167/9 என்று கட்டுப்படுத்தி தொடரை 3-0 என்று கைப்பற்றியது. இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மேற்கிந்திய தீவுகளை சுற்றுப்பயணத்தில் ஒரு வெற்றி கூட பெறாமல் திருப்பி அனுப்பியது.

  இந்த வெற்றியானது டி20 அணி தரவரிசையில் இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி இந்திய டி20 அணியை முதலிடத்திற்கு கொண்டு வர உதவியது, ரோஹித் ஷர்மாவின் அணி இப்போது 269 தரவரிசைப் புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. இங்கிலாந்து மற்றும் இந்தியா இரண்டும் ஒரே 269 தரவரிசைப் புள்ளிகளுடன் இருந்தாலும் இந்தியா மொத்தம் 10,484 புள்ளிகள் இங்கிலாந்தைக் காட்டிலும் கூடுதலாக பெற்றுள்ளது. இங்கிலாந்தின் புள்ளிகள்10,474.

  பாகிஸ்தான் (ரேட்டிங் 266), நியூசிலாந்து (255) மற்றும் தென்னாப்பிரிக்கா (253) ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களை ஆக்கிரமிக்க, ஆஸ்திரேலியா (249) இலங்கைக்கு எதிரான தொடரை 4-1 என வென்ற பிறகு ஆறாவது இடத்தில் நீடிக்கின்றன.

  லக்னோவில் வியாழக்கிழமை (பிப்ரவரி 24) தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்காக இலங்கையை இந்தியா சந்திக்கிறது. . மீதமுள்ள இரண்டு போட்டிகளை தர்மசாலாவில் நடைபெறும்.

  மறுபுறம், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி தனது ஐந்து டி20 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐந்தாவது போட்டியில் அவர்கள் பெற்ற வெற்றியின் காரணமாக அவர்கள் கிளீன் ஸ்வீப்பைத் தவிர்த்துவிட்டனர், மேலும் இந்தியாவுக்கு எதிராக அந்த வேகத்தை எடுத்துச் செல்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  இலங்கை தொடருக்கு எதிரான இந்திய டி20 அணி வருமாறு:

  ரோஹித் சர்மா (கே), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (வி.கே), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், எம்.டி சிராஜ், சஞ்சு சாம்சன் (wk), ரவீந்திர ஜடேஜா , யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அவேஷ் கான்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: ICC Ranking, India vs west indies, Rohit sharma