ஹராரேயில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஜிம்பாப்வே 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 83/6 என்ற நிலையிலிருந்து பின் கள வீரர்கள் நன்றாக ஆடி ஸ்கோரை 189 ரன்களுக்குக் கொண்டு வந்தனர், ஆனால் ஜிம்பாப்வே 40.3 ஓவர்கள்தான் தாக்குப் பிடித்தனர்.
அதிகபட்சமாக ஜிம்பாப்வே கேப்டன் ரெஜிஸ் சகப்வா 51 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் 110/8 என்ற நிலையில் இருந்த ஜிம்பாவே, 9 ஆவது விக்கெட் பாட்னர்ஷிப்பில் 70ரன்களை எடுத்தது. இது வெறும் 11 ஓவர்களில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தரப்பில் தீபக் சஹர், பிரஷித் கிருஷ்ணா, அக்ஷர் படேல் தலா 3 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனால் ஜிம்பாவே அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Also Read : இங்கிலாந்தை தட்டித் தூக்கிய ரபாடா 5விக்.: 165 ஆல் அவுட்
190 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் 30.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. ஷுப்மன் கில் 10 பவுண்டரிகள் 1 சிக்சர் என 82 ரன்களுடனும் ஷிகர் தவான் 81 ரன்களுடனும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இந்தியா இந்த போட்டியில் வென்றிருப்பது ரசிகர்களிஐயே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கோப்பை சிறிது நாட்களில் தொடங்க இருப்பதால், அணியின் பெஞ்ச் ஸ்ட்ரென்த் மேலும் பலம் ஆகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் காயத்திலிருந்து மீண்டு வந்த தீபக் சஹர் 7 ஓவர்களில் வெறும் 27 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Indian cricket team, Kl rahul