ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பந்துவீச்சில் தெறிக்கவிட்ட இந்தியா.. 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவேவை வீழ்த்திய ரோகித் படை!

பந்துவீச்சில் தெறிக்கவிட்ட இந்தியா.. 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவேவை வீழ்த்திய ரோகித் படை!

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் பாண்டிய மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இந்தியா - ஜிம்பாவே அணிகள் இடையிலான டி20 உலக கோப்பை ஆட்டத்தில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டி20 உலககோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று இன்றோடு நிறைவடைகிறது. ஏற்கனவே இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாவே அணியுடன் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். இந்திய அணியில், தினேஷ் கார்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்.

    ரோஹித் ஷர்மாவும், கே.எல்.ராகுலும் ஓப்பனர்களாக இறங்கினர். 15 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரோஹித் ஷர்மா தனது விக்கெட்டை இழந்தார். பிறகு களமிறங்கிய விராட் கோலியுடன் கே.எல்.ராகுல் பாட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினர். 87 ரன்கள் இருந்த போது, கோலி 36 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

    அரை சதம் கடந்த ராகுலும் அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை இழக்க, இந்திய அணி, 95 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பெரிதும் எதிர்பாக்கப்பட்ட ரிஷப் பந்த் 3 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து சூர்ய குமார் யாதவ் - ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. 14 ஓவரில் 103 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, சூர்ய குமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடியால், 20 ஓவர்களுக்கு 186 ரன்களை எடுத்தது. அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையும் படிங்க: டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி பலாத்காரம் : இளம்பெண் கொடுத்த புகாரில் ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர்!

    இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாவே அணி, தொடக்கம் முதலே விக்கெட்டை பறிகொடுத்து வந்தது. 36 ரன்களுக்கு 5 விக்கெட்டை எடுத்து திணறிய ஜிம்பாவே அணி 17.2 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை இழந்தது. இதனால் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் பாண்டிய மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: India, Melbourne, T20 World Cup, Zimbabwe