இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். 1 ரன் எடுத்திருந்தபோது தில்சன் மதுசனகா பந்துவீச்சில் தனஞ்செயாவிடம் கேட்ச் கொடுத்து இஷான் வெளியேறினார். இதன் பின்னர் இணைந்த கில் – ராகுல் திரிபாதி இணை எந்த நெருக்கடியும் இல்லாமல் அதிரடியாக ரன்களை சேர்த்தது. 2 சிக்சர் 5 பவுண்டரியுடன் 16 பந்துகளில் ராகுல் திரிபாதி 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கில் – சூர்யகுமார் ஜோடி இணைந்து, இலங்கையின் பந்துவீச்சை சிதறடித்தது. 36 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 46 ரன்கள் சேர்த்த சுப்மன் கில் ஹசரங்கா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். கில்-சூர்யகுமார் இருவரும் 3ஆவது விக்கெட்டிற்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சூர்ய குமார் யாதவ் சதம் அடித்து அசத்தினார். 51 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 சிக்சர் 7 பவுண்டரியுடன் 112 ரன்களை எடுத்தார். அவருடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் கொடுத்த அக்சர் படேல் 9 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 228 ரன்களை குவித்தது. இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக நடையைக் கட்டினர்.
தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா 15 ரன்னிலும, குசால் மென்டிஸ் 23 ரன்களிலும் வெளியேற அடுத்து வந்த அவிஷ்கா பெர்ணான்டோ 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தனஞ்செய டி சில்வா 22, சரித் அசலங்கா 22 ரன்களை எடுத்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் தடுமாறும் தென்னாப்பிரிக்கா…
கேப்டன் தசுன் ஷனகா 23 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 16.4 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
காஸ்ட்லி கிறிஸ்டியானோ... ஒரு நொடிக்கு ரொனால்டோ சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.
அடுத்ததாக இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் செவ்வாயன்று தொடங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, India vs srilanka