ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மகளிர் ஆசியகோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி..!

மகளிர் ஆசியகோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி..!

மகளிர் கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட்

வரும் 3-ம் தேதி நடைபெறவுள்ள அடுத்த போட்டியில், இந்திய மகளிர் அணி மலேசிய அணியை எதிர்கொள்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | bangladesh

  வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி, 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில், இலங்கை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.

  இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, 3-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்- ஜெமிமா ரோட்ரிகஸ் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய ஜெமிமா 76 ரன்கள் குவித்தார். இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது.

  ALSOREAD | தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டி - தொடரை வெல்லுமா இந்திய அணி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

  இதையடுத்து, 151 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சில் நிலைகுலைந்தது. இலங்கை வீராங்கனைகள் 6 பேர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இறுதியில் 109 ரன்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்ததால், இந்திய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இந்திய வீராங்கனை தயாளன் ஹேமலதா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. வரும் 3-ம் தேதி நடைபெறவுள்ள அடுத்த போட்டியில், இந்திய மகளிர் அணி மலேசிய அணியை எதிர்கொள்கிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Asia cup cricket, India team, India v Srilanka, India vs srilanka, Srilanka, T20