ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

3ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கையை 317 ரன்கள் வித்திசாயத்தில் வென்றது இந்திய அணி…

3ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கையை 317 ரன்கள் வித்திசாயத்தில் வென்றது இந்திய அணி…

இலங்கையின் விக்கெட்டுகளை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி.

இலங்கையின் விக்கெட்டுகளை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி.

இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்களை எடுத்தது. 391 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இலங்கை அணி 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஆகியோர் விளையாடினர். ரோஹித் சர்மா 42 ரன்களில் வெளியேற, அதிரடியாக ரன்களை சேர்த்த சுப்மன் கில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்களை எடுத்து அணி மிகப் பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார்.

ஷ்ரேயாஸ் அய்யர் 38 ரன்களும், கே.எல்.ராகுல் 7 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்களும், அக்சர் படேல் 2 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் கசுன் ரஜிதா, லஹிரா குமாரா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கை இலங்கை பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் நுவனிது பெர்னான்டோ 19 ரன்களை எடுத்தார். கேப்டன் தசுன் ஷனகா 11 ரன்களும், கசுன் ரஜிதா 13 ரன்களும் எடுத்தனர்.

மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற இலங்கை அணி 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ், முதல் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி இலங்கை அணியை சிதறடித்தார். ஷமி மற்றும் குல்தீப் யாதவும் தங்கள் பங்குக்கு இலங்கை அணிக்கு சரிவை ஏற்படுத்தினர். அற்புதமாக பந்துவீசிய சிராஜ் இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவற்றில் 2 விக்கெட்டுகள் போல்டாகின. மேலும், சமிகா கருணாரத்னேவை சிராஜ் ரன் அவுட் செய்தார்.

இதேபோல் குல்தீப் யாதவ், முகம்மது ஷமி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கு அளிக்கப்பட்டது.

First published:

Tags: Cricket