• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ICC World Cup 2019 | இந்தியாவிடம் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா அணி! தோனி , ரோஹித் சர்மா அபார ஆட்டம்!

ICC World Cup 2019 | இந்தியாவிடம் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா அணி! தோனி , ரோஹித் சர்மா அபார ஆட்டம்!

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

அதிகபட்சமாக ரோகித் சர்மா 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை விளையாடி இந்தியாவிற்கு வெற்றிக் கனியை ஈட்டினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் சுற்று போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஹசிம் ஆம்லா, டி கான் தொடக்க வீரர்களாக முதலில் களமிறங்கினர். பும்ரா வேகத்தில் ஆம்லா ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து, 2 ஓவர்கள் கழித்து டி காக்-ஐயும் பும்ரா 10 ரன்களில் அவுட் ஆக்கினார்.

இதனை அடுத்து இறங்கிய கேப்டன் டூ பிளீசிஸ் சற்று நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருக்கு சப்போர்ட் ஆக வான் டெர் டுசென் நின்றார்.

20-வது ஓவரில் டூசென் 22 ரன்கள் எடுத்த நிலையில், சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து முக்கிய வீரர் டுமினி ஆட வந்தார். 23-வது ஓவரில் அவரையும் சாஹல் 3 ரன்களில் வெளியேற்றினார்.

இதனை அடுத்து, சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்து கொண்டே இருக்க, தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. சாஹல் 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோஹித் சர்மா, சிகர் தவான் முதலில் களத்தில் இறங்கினர்.

தவான் வெறும் 8 ரன்கள் எடுத்து ரபாடாவிடம் விக்கெட்டை  பறிகொடுத்தார். இதனையடுத்து விராட் கோலி 34 பந்துகளுக்கு 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபெஹுல்க்வாயோ வீசிய பந்தில் அவுட்டாகினார்.

பின்னர் வந்த லோகேஷ் ராகுல்,  ரோகித் சர்மாவுடன் இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்தார். இந்தியா 139 ரன்கள் சேர்த்த நிலையில், லோகேஷ் ராகுல் 42 பந்துகளுக்கு 26 ரன்கள் எடுத்து ரபாடா வீசிய பந்தில் அவுட்டாகினார்.

இதனையடுத்து களமிறங்கிய தல தோனி, நிதானமாக விளையாடி 34 ரன்கள் எடுத்து, மோரிஸ் வீசிய பந்தில்  விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் களமிறங்கிய ஹர்டிக் பாண்டியா, அதிரடியாக 7 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக 47.3 ஓவரில் 230 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது.

இதல் அதிகபட்சமாக ரோகித் சர்மா 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை விளையாடி இந்தியாவிற்கு வெற்றிக் கனியை ஈட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Anand Kumar
First published: