ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மிரட்டிய சூர்யகுமார், அசத்திய ஹூடா.. நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

மிரட்டிய சூர்யகுமார், அசத்திய ஹூடா.. நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது ஆட்டம் மவுன்ட் மாங்கானு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரிஷப் பந்த் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றோரு தொடக்க வீரர் இஷான் கிஷான் 36 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

  இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் போட்டி சிறுது நேரம் பாதிக்கப்பட்டது. மழை விட்ட பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை திணற வைத்தார்.சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார்.

  இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் தீம் சவுதி கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

  இதையும் படிங்க: என்னப்பா இது... வீடியோ கேம் பார்த்த மாறி இருக்கு.. சூர்யகுமார் இன்னிங்சை பாராட்டி தள்ளிய விராட் கோலி

  இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பின் ஆலானை முதல் ஓவரிலே புவனேஸ்வர் குமார் விக்கெட்டை எடுத்தார்.

  தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர்கள் நியூசிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை எளிதாக வீழ்த்தினார். தொடந்து நீதனமாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அரை சதம் அடித்து அணியை கவுரவ ஸ்கோர் எடுக்க உதவினார்.

  இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய தீபக் ஹோடா 4 விக்கெட்டையும், சிராஜ் மற்றும் சாஹால் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

  முதல் டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில் 2வது போட்டியில் இந்திய அணி வெற்றி தொடரில் முன்னிலை வகித்துள்ளது. மேலும் மூன்றாவது டி20 போட்டி நியூசிலாந்து வெற்றி பெற்றால் தொடர் இரு அணிகளும் பகிர்ந்து கொள்ளும் நிலை ஏற்படும். இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் . இதனால் அடுத்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பாக்கின்றனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BCCI, India vs New Zealand