இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - தொடரில் முன்னிலை!

இந்தியா வெற்றி

1986, 2014-ம் ஆண்டுக்கு பிறகு புகழ்பெற்ற இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் இந்தியாவிற்கு ஒரு வரலாற்று டெஸ்ட் வெற்றி கிடைத்திருக்கிறது.

 • Share this:
  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

  1986, 2014-ம் ஆண்டுக்கு பிறகு புகழ்பெற்ற இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் இந்தியாவிற்கு ஒரு வரலாற்று டெஸ்ட் வெற்றி கிடைத்திருக்கிறது. லாட்ஸ் வெற்றியின் மூலம் கபில்தேவ், தோனி வரிசையில் கோலியும் புதிய வரலாறு படைத்திருக்கிறார்.

  இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டி சமநிலையில் முடிந்தது. இதையடுத்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளுக்குமிடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

  virat kohli


  Also Read:  ஒற்றை சீட்டுடன் கச்சிதமான வடிவில் அறிமுகமான Honda U-BE எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

  மிரட்டிய கே.எல்.ராகுல்:

  இந்திய அணியின் சார்பில் முதல் இன்னிங்ஸில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் நங்கூர தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். கே.எல்.ராகுல் அபாரமான சதம் அடித்தார். ரோகித் சர்மா சதத்தை நெருங்கி விக்கெட்டை இழந்தார். இதன் பின்னர் கோலி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பங்களிப்புடன் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 364 ரன்களை குவித்தது இந்திய அணி. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 129 ரன்களும், ரோகித் சர்மா 83 ரன்களும், கோலி 42 ரன்களும், ஜடேஜா 40 ரன்களும், ரிஷப் பந்த் 37 ரன்கள் எடுத்தனர்.  ஜோ ரூட் அபாரம்:

  இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியும் இந்திய பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நெருங்கி வந்து அவுட் ஆனார். இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்புக்கு 381 ரன்களை திரட்டியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 180 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 57 ரன்களும், ஜோசப் பர்ன்ஸ் 49 ரன்களும் எடுத்தனர்.

  Also Read:    கார்கள், ஹெலிகாப்டர் முழுக்க பணத்துடன் ஆப்கனை விட்டு தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கனி – புதிய தகவல்கள்

  அசத்திய டெயில் எண்டர்கள்:

  சிறிய முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. டெயில் எண்டர்களான முகமது ஷமி அரைசதமும், பும்ரா 34 ரன்களும் எடுத்து திரும்பிப் பார்க்க வைத்தனர். இதையடுத்து இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிக்ளேர் செய்தார் கேப்டன் கோலி. இதன் மூலம் 272 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து 2வது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் கைவசம் 60 ஓவர்கள் இருந்தன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆரம்பமே அதிர்ச்சி:

  இந்த நேரத்தில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பர்ன்ஸை டக் அவுட் ஆக்கி ஜச்பிரித் பும்ராவும், இரண்டாவது ஓவரில் டாம் சிப்லேயை டக் அவுட் ஆக்கி முகமது ஷமியும் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து இங்கிலாந்து அணியால் இறுதி வரை மீள முடியவில்லை. டோ ரூட்டை 33 ரன்களில் காலி செய்தார் பும்ரா. அதே போல பிற்பகுதி பேட்ஸ்மேன்கள் 4 பேரை வரிசையாக காலி செய்தார் முகமது சிராஜ். இதன் மூலம் இங்கிலாந்து அணியை வெறும் 120 ரன்களுக்கு சுருட்டி 151 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியை இந்திய அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது.

   
  Published by:Arun
  First published: