ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் சுப்மன் கில் அதிரடி சதம்… வலுவான நிலையில் இந்திய அணி

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் சுப்மன் கில் அதிரடி சதம்… வலுவான நிலையில் இந்திய அணி

சதம் அடித்த சுப்மன் கில் - உடன் புஜாரா

சதம் அடித்த சுப்மன் கில் - உடன் புஜாரா

இன்றைக்கு 3ஆம் நாள் ஆட்டமே நடந்து வருவதால் முதல்டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் சதம் அடித்துள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோக்ரம் நகரில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்களை எடுத்தது. அடுத்து பேட் செய்த வங்கதேசம், இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

WATCH - மனம் உருகி புகழ்ந்த நிருபர்.. அழுகை தொண்டையை அடைக்க நெகிழ்ந்து நின்ற மெஸ்ஸி!

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 254 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2ஆவது இன்னிங்சை தொடர்ந்து வருகிறது. தொடக்க வீரர்களாக கேஎல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் களத்தில் இறங்கினர். 62 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்த ராகுல் கலீல் அகமது பந்து வீச்சில் தைஜுல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதைடுத்து ஜோடி சேர்ந்த புஜாரா – கில் இணை வங்க தேச பந்து வீச்சை சிரமமே இல்லாமல் எதிர்கொண்டு விளையாடியது. ஒருநாள் போட்டியைப் போல் விளையாடிய சுப்மன் கில் டெஸ்டில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ ராஜினாமா… உலகக்கோப்பை தோல்வியை தொடர்ந்து முடிவு

கில் 152 பந்துகளில் 3 சிக்சர் 10 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் எடுத்திருந்தபோது மெஹிதி ஹசன் பந்துவீச்சில் மஹ்முதல் ஹசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து, புஜாராவுடன் விராட்கோலி இணைந்து விளையாடி வருகிறார்.

தற்போது வரை இந்திய அணி வங்கதேசத்தை விட 442 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்றைக்கு 3ஆம் நாள் ஆட்டமே நடந்து வருவதால் முதல்டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

First published:

Tags: Cricket, India vs Bangladesh, Shubman Gill