இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி டிசம்பர் 3-இல் தொடக்கம்?

கொரோனோ வைரஸ் பரவலால் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாடுகளில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி டிசம்பர் 3-இல் தொடக்கம்?
INDvsAUS
  • Share this:
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த உலகக் கோப்பை டி20 போட்டிகள் 2022 ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்படவுள்ளதால், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் - ஜனவரி மாதங்களில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஒரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் திட்டமிட்டுள்ளதாகவும் டிசம்பர் 3-ஆம் தேதி பிரிஸ்பேனில் இந்த தொடர்  தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் அடிலெய்டு, மெல்போர்ன், சிட்னி ஆகிய இடங்களில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின் படி அடிலெய்ட் டெஸ்ட் போட்டி  பகல் - இரவு ஆட்டமாகவும், பிங்க் நிற பந்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.


முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மெல்போரினில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டி 'பாக்ஸிங் டே' அதாவது கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் தொடங்கும் டெஸ்ட் போட்டியாகவும், நான்காவது டெஸ்ட் போட்டி 2021 புதுவருட போட்டியாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று நடைபெறும் ஐசிசியுடனான   கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...நீண்ட கால வைப்பு நிதி, சேமிப்புக் கணக்குகளின் வட்டி விகிதத்தைக் குறைக்கின்றன வங்கிகள்


 
First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading