Home /News /sports /

இந்த பூமியின் பெரிய அணிகளுள் இந்திய அணியும் ஒன்றாம்- முன்னாள் ஆஸி. பவுலர் ‘டூ மச்’

இந்த பூமியின் பெரிய அணிகளுள் இந்திய அணியும் ஒன்றாம்- முன்னாள் ஆஸி. பவுலர் ‘டூ மச்’

முன்னாள் ஆஸி. இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் பிராட் ஹாக்.

முன்னாள் ஆஸி. இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் பிராட் ஹாக்.

முன்னால் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பிராட் ஹாக், இந்த பூமியின் ஆகச்சிறந்த அணிகளுள் இந்திய அணியும் ஒன்று, என்றும் விராட் கோலி தலைமையில் இந்திய அணி உச்சங்களை தொடுகிறது என்றும் புகழ்ந்து பேசியுள்ளார்.

    முன்னால் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பிராட் ஹாக், இந்த பூமியின் ஆகச்சிறந்த அணிகளுள் இந்திய அணியும் ஒன்று, என்றும் விராட் கோலி தலைமையில் இந்திய அணி உச்சங்களை தொடுகிறது என்றும் புகழ்ந்து பேசியுள்ளார்.

    1970,80-ம் ஆண்டுகளின் மேற்கிந்திய தீவுகள் அணியைப் போலவும் 2000ம் ஆண்டுகளில் ஸ்டீவ் வாஹ், தலைமையிலான ஆஸ்திரேலிய அணி போலவும் இந்திய அணி திகழ்கிற்து என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

    ஐபிஎல் வேலை வேண்டும் போலிருக்கிறது இவருக்கு. பவுலிங்கை வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறது இந்திய அணி,பேட்டிங் படு தண்டம், 70-80 வெஸ்ட் இண்டீஸ் அணி இப்படியா அல்லது ஸ்டீவ் வாஹின் 2000-த்தின் ஆஸ்திரேலிய அணி இப்படியா? அவை ஆல்ரவுண்ட் அணி, இந்த இந்திய அணி பவுலர்களின் உழைப்பில் உண்டு களித்து வாழும் பேட்டர்கள் உள்ள அணி என்பது ஏனோ பிராட் ஹாகுக்குத் தெரியவில்லை ஏனெனில் அவருக்கு இங்கு ஏதாவது வேலை வேண்டும் என்று தெரிகிறது.

    யூடியூப் சேனலில் அவர் கூறியது, “தென் ஆப்பிரிக்காவை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது இந்திய அணி, மீதமுள்ள 2 டெஸ்ட்களில் ஒன்றில் இந்தியா வென்று தொடரை வென்றால் உலகின் தலை சிறந்த அணி இந்தியாதான்.

    இந்த பூமியில் கிரேட்டஸ்ட் அணிகளுள் ஒன்றாக இந்திய அணி கருதப்படும். 2000ம்களில் ஆஸ்திரேலியா இருந்தது போல், 1970-80களில் வெஸ்ட் இண்டீஸ் இருந்தது போல். இந்தியா சிறந்த அணி ஏனெனில் பயணிக்கும் போது அந்த அணி படு பயங்கரமாக இருக்கிறது. இங்கிலாந்தை இங்கிலாந்து மண்ணில் அடித்துத் துவைத்தது இந்தியா.

    பாதியில் நின்ற தொடர் நடந்தால் இந்தியா 3-1 என்று இங்கிலாந்தை நசுக்கும் ஏனெனில் இங்கிலாந்திடம் பதில் இல்லை. இங்கிலாந்து தி ஹண்ட்ரட் தொடரை அதிகம் நேசித்தது, பெரிய ஸ்டார்களை அதில் இழந்தது” என்றார் பிராட் ஹாக்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Captain Virat Kohli, India vs South Africa

    அடுத்த செய்தி