தொடர் மழை காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் ஒரு நாள் போட்டி ரத்து..!

2வது ஒரு நாள் போட்டி வரும் 5ம் தேதி லக்னோ மைதானத்தில் நடைபெற உள்ளது.

தொடர் மழை காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் ஒரு நாள் போட்டி ரத்து..!
தர்மசாலா மைதானம்
  • Share this:
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தர்மசாலாவில் நடைபெறும் முதல் ஒரு நாள் போட்டி ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தொடர்ந்து மழை பெய்ததால் முதல் ஒரு நாள் போட்டி ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்யப்பட்டது.

நியூசிலாந்து அணிக்கு தெடாரில் இந்திய அணி தொடர் தோல்விக்கு பின் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருந்ததால் இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். காயத்தில் இருந்து விடுப்பட்ட ஷிகார் தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் அணிக்கு திரும்பி உள்ளது இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது.தென்னாப்பிரிக்கா உடனான 2வது ஒரு நாள் போட்டி வரும் 5ம் தேதி லக்னோ மைதானத்தில் நடைபெற உள்ளது.

 
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்