• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • India vs New Zealand WTC Final: கேன் வில்லியம்சனின் தடுப்பாட்ட மாஸ்டர் கிளாஸ், ஷமி அட்டகாசம்- சுவாரசியமான கட்டத்தில் பைனல்

India vs New Zealand WTC Final: கேன் வில்லியம்சனின் தடுப்பாட்ட மாஸ்டர் கிளாஸ், ஷமி அட்டகாசம்- சுவாரசியமான கட்டத்தில் பைனல்

மொகமட் ஷமி.

மொகமட் ஷமி.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சவுத்தாம்டன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சுவாரஸ்யமான 6ம் நாள் ஆட்டத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்திய அணி 5ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 64 ரன்களுடன் 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

  • Share this:
நியூசிலாந்து தன் முதல் இன்னிங்சில் 249 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேன் வில்லியம்சன் நெருக்கடியான இந்திய வேக மற்றும் ஸ்விங் பவுலிங்கிற்கு இணங்காமல் ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி 177 பந்துகளில் 49 ரன்கள் என்ற தடுப்பாட்ட மாஸ்டர் கிளாஸ் இன்ன்ங்சை ஆடினார். முகமது ஷமி அபாரமான ஸ்விங் பவுலிங்கில் 76 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இஷாந்த் சர்மாவின் ஆக்‌ஷம் மாறிவிட்டது, தலையை நிமிர்த்தி முன் காலை நேராக வைத்து வீசும் வழக்கம் போய் முன் காலை மடக்கி, வலது கையை சைடு ஆன் என்று மாற்றியுள்ளார், இது அவருக்கு ஒரு போதும் கைகொடுக்காது, எதிர்காலத்தில் அடிவாங்குவதற்கான ஒரு கெட்டப் பழக்க பந்து வீச்சிற்கு போயுள்ளார் இஷாந்த் சர்மா, ஆனால் நேற்று அவர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், அதுவும் பிரைஸ் விக்கெட் கேன் வில்லியம்சன் விக்கெட் உட்பட.

டெஸ்ட் கிரிக்கெட்டின் அபாரமான ஒரு தினத்தின் முடிவில் இந்தியா தன் 2வது இன்னிங்சில் ரோகித் சர்மா (30), சுப்மன் கில் (8) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் எடுத்துள்ளது, விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். ஃபுல் லெந்தில் வந்த சுப்மன் கில் பிளிக் செய்ய முயன்று எல்.பி.ஆனார்.

ரோகித் சர்மாவும் 4 அவுட்ஸ்விங்கர்களுக்குப் பிறகு நேராக வந்த பந்தை ஆடாமல் விட்டார். கால்காப்பைத் தாக்க பிளம்ப் எல்.பி., சவுத்தி அபாரமாக வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். சுப்மன் கில், ரோகித் சர்மா இருவரையும் அவுட் ஸ்விங்கரில் ஒர்க் அவுட் செய்து வீழ்த்தி விட்டார்.

இந்தியா ஆட்டத்தில் மீண்டு எழுச்சி பெற்றாலும் நியூசிலாந்து அணிதான் வெற்றி பெறும் அணி போல் இப்போதைக்கு உள்ளது. காரணம் நியூசிலாந்தின் கடைசி 5 விக்கெட்டுகள் நூறுக்கும் மேலான ரன்களைச் சேர்த்தனர் மாறாக இந்திய அணியின் கடைசி 5 விக்கெட்டுகள் 61 ரன்களையே சேர்த்தனர்.

6ம் நாளான இன்று வெயில் அடிக்கும் என்பதால் இந்தியாவை விரைவில் வீழ்த்தி சிறிய இலக்கை விரட்ட நியூசிலாந்து மனம் கொள்ளும், இந்திய அணி ரிஷப் பந்த்தை முன்னால் இறக்கி கவுண்ட்டர் அட்டாக் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டியின் நார்மலான சூழ்நிலையின் படி பார்த்தால் இந்த டெஸ்ட் டிராவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். டிராபி பகிர்ந்து கொள்ளப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேற்று காலை முதல் 16 ஓவர்களில் 13 ரன்களைத்தான் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், வில்லியம்சன் சேர்க்க முடிந்தது. ஷமி ராஸ் டெய்லரை பிடித்து ஆட்டிப்படைத்தார்.

ஆனால் இந்திய பந்து வீச்சின் ஆக்ரோஷத்துக்கு கிடைத்த பரிசு 7.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர், ராஸ் டெய்லரின் நல்ல ட்ரைவை சுப்மன் கில் டைவ் அடித்து கேட்சாக்கினார். ஹென்றி நிகோல்ஸ், இஷாந்த் சர்மா பந்தை நோண்டி ரோகித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். வாட்லிங் ஷமியின் அபாரமான ஸ்விங் ஆகாத நேர் பந்து முயற்சியில் பவுல்டு ஆனார். வாட்லிங் ராங் ஃபுட்டில் சென்று விட்டார், லைனை விட்டு விட்டார். ஷமி மீண்டும் இடைவேளைக்குப் பிறகு வந்து கொலின் டி கிராண்ட் ஹோமை எல்.பி. செய்தார். நியூசிலாந்து அந்த தருணத்தில் 162/6 என்று இருந்தது.

ஆனால் கைல் ஜேமிசன் 16 பந்துகளில் 21 ரன்களையும் டிம் சவுத்தி 30 ரன்களையும் எடுக்க நியூசிலாந்து அணி இந்திய ஸ்கோரைத் தாண்டி 249 ரன்களை எட்டியது, சவுத்தி 2 சிக்சர்களையும் ஜேமிசன் ஒரு சிக்சரையும் விளாசினர். கடைசி 4 விக்கெட்டுகளுக்கு 87 ரன்களைச் சேர்த்தனர். இஷாந்தின் ஒன்றுமில்லாத பந்தை வில்லியம்சன் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து தேவையில்லாமல் விக்கெட்டைக் கொடுத்து 49 ரன்களில் வெளியேறினார். ஷமியை சிக்சர் அடித்த ஜேமிசன் ஷமியின் பவுன்சரில் டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். சவுத்தியை ஜடேஜா வீழ்த்தினார். நீல் வாக்னர், அஸ்வின் பந்தில் டக் அவுட் ஆனார். ட்ரெண்ட் போல்ட் 7 நாட் அவுட்டில் ஒரு பவுண்டரி அடித்தார்.

விராட் கோலி தன் கோணங்கித் தனங்களைக் காட்டுவதை நிறுத்தி கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்தியிருந்தால் கடைசி 4 விக்கெட்டுகளுக்கு 87 ரன்கள் போயிருக்க வாய்ப்பில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: