இந்திய அணிக்கும் இந்தியா-ஏ கிரிக்கெட் அணிக்கும் விரைவில் இங்கிலாந்தில் 2  போட்டிகள்

இந்தியா ஏ பயிற்சியாளர் ராகுல் திராவிட்- இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

2021-ல் இங்கிலாந்துடன் இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கடினமான தொடரில் விளையாட ஆஸ்திரேலியக் கோட்டையைத் தகர்த்த இந்திய அணி செல்கிறது.

 • Share this:
  2021- ஆகஸ்டில் இங்கிலாந்துடன் இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கடினமான தொடரில் விளையாட ஆஸ்திரேலியக் கோட்டையைத் தகர்த்த இந்திய அணி செல்கிறது.

  இதில் பயிற்சி ஆட்டங்களுக்காக நான்கு நாட்கள் நடைபெறும் 2 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஜூலையில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

  ஜூலை 21 முதல் 24ம் தேதி வரை இந்திய - இந்தியா ஏ அணிகள் வாண்டேஜ் ரோட் மைதானத்தில் மோதுகின்றன.

  2வது பயிற்சி ஆட்டத்தில் கிரேஸ் ரோடு மைதானத்தில் இந்தியா-இந்தியா ஏ அணிகள் மோதுகின்றன. ஒன்று நார்த்தாம்ப்டன் ஷயர் மற்றொன்று லீஷயர்.

  முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் ட்ரெண்ட் பிரிட்ஜில் தொடங்குகிறது.

  இந்தியா ஏ அணி டெர்பி ஷயர் மற்றும் எஸ்ஸெக்ஸ் அணியுடன் தனியாக கவுண்ட்டி போட்டிகளில் ஆடுகிறது, இதுவும் இங்கிலாந்து தொடரின் ஒரு பகுதிதான்.

  இந்தியா-இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகள் மார்ச் மாதம் முதல் விற்பனையாகும்.

  நடப்பு நட்சத்திரங்களும் எதிர்கால நட்சத்திரங்களும் மோதும் இந்தப் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

  இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்தியா ஏ பயிற்சியாளர் ராகுல் திராவிட், எது டஃப் அணி என்று தெரிந்து விடும்.
  Published by:Muthukumar
  First published: