Home /News /sports /

நியூசிலாந்து ஏ-அணிக்கு எதிராக சதம் மற்றும் 94 ரன்கள் விளாசிய சிஎஸ்கே ஸ்டார் ருதுராஜ்- உம்ரன் மாலிக் ஏமாற்றம்

நியூசிலாந்து ஏ-அணிக்கு எதிராக சதம் மற்றும் 94 ரன்கள் விளாசிய சிஎஸ்கே ஸ்டார் ருதுராஜ்- உம்ரன் மாலிக் ஏமாற்றம்

ருதுராஜ் கெய்க்வாட்

ருதுராஜ் கெய்க்வாட்

சிஎஸ்கே ஸ்டாரான ருதுராஜ் கெய்க்வாட் 127 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 108 ரன்கள் விளாசி அசத்தினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bangalore, India
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஏ அணி பெங்களூருவில் நடந்த 3வதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் தோற்றது, இதன் மூலம் இந்தியா ஏ அணி 1-0 என்று டெஸ்ட் தொடரை வென்றது.

இந்தியா ஏ அணிக்குக் கேப்டன் பிரியங்க் பஞ்சல், நியூசிலாந்து அணிக்குக் கேப்டன் டாம் புரூஸ். முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணியில் சிஎஸ்கே ஸ்டாரான ருதுராஜ் கெய்க்வாட் 127 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 108 ரன்கள் விளாசி அசத்தினார். சப்ராஸ் கான் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். உபேந்திர யாதவ் 76 ரன்கள் சேர்க்க இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நியூசிலாந்து ஏ சார்பில் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ பிஷர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து ஏ அணி 237 ரன்களுக்குச் சுருண்டது. சவுரவ் குமார் 4 விக்கெட்டுகளைச் சாய்க்க, ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதிவேக பவுலர் உம்ரன் மாலிக் பயங்கர ஏமாற்றமளித்து 10 ஓவர்களில் 54 ரன்கள் விளாசப்பட்டார்.

மேலும் படிக்க : விராட் கோலி 3வது தொடக்க வீரர், ராகுல்தான் ஓப்பனிங் - ரோஹித் சர்மா உறுதி

56 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா ஏ அணி 2வது இன்னிங்சில் களமிறங்கிய போது மீண்டும் ருதுராஜ் கெய்க்வாட் 164 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் விளாசி 6 ரன்களில் இன்னொரு சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். ரஜத் படிதா 109 ரன்கள் விளாசினார்.
ஆனால் 2வது இன்னிங்சில் சர்பராஸ் கான் ஏமாற்றமளிக்கவில்லை, அவர் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 74 பந்துகளி 63 ரன்கள் விளாசினார். இந்திய அணி 359/7 என்று டிக்ளேர் செய்ய நியூசிலாந்து ஏ அணிக்கு வெற்றி இலக்கு 416 ரன்கள்.

ஆனால் அந்த அணி ஏப்பசோப்பையாக ஆட்டமிழக்காமல் சவாலாகத் திகழ்ந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜோ கார்ட்டர் சதம் விளாசினார். 302 ரன்கள் வரை வந்து ஆல் அவுட் ஆகினார், இந்தியா ஏ அணியில் சவுரவ் குமார் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், சர்பராஸ் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, உம்ரன் மாலிக் இந்த முறை 15 ஓவர் 62 ரன் ஒரு விக்கெட் என்று ஏமாற்றமே அளித்தார்.

இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
Published by:Raj Kumar
First published:

Tags: Century, India vs New Zealand, Indian cricket team

அடுத்த செய்தி