இந்திய ஏ அணிக்கும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கும் தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்போண்டைனில் நடைபெறும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி முடிவடைகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஏ அணியின் கேப்டன் பீட்டர் மலன் பேட்டிங்யை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய சரேல் ஏர்வி 75 ரன்கள் குவித்து நவ்தீப் சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.அதை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் டோனி சோர்சி 58 ரன்களிலும் , காயா சோண்டோ 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்களையும், சவுரப் குமார் 2 விக்கெட்களையும், தீபக் சாகர் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா ஏ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்களையும் , சவுரப் குமார் 2 விக்கெட்களையும் , தீபக் சாகர் 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று பிற்பகல் தொடங்குகிறது.
முதல் நாள் ஆட்ட முடிவில் மிகேல் பிரிடோரியஸ் 1 ரன்னுடனும் மார்க்கோ ஜேன்சன் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி 19 ஓவர் 7 மெய்டன் 42 ரன்கள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இடது கை ஸ்பின்னர் சவுரவ் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்கா ஏ அணியில் டோனி டி சோர்சி 58 ரன்களுடனும் கயா ஜோண்டோ 56 ரன்களையும் எடுத்தனர்.
Also Read: தென் ஆப்பிரிக்கா தொடரில் புஜாரா, ரஹானேவுக்கு கல்தா?- ட்ராவிட் சூசகம்
தீபக் சாகர் புதிய பந்தில் சிறப்பாக வீசி 14 ஓவர் 4 மெய்டன் 35 ரன்கள் 1 விக்கெட் என்று முதல் நாளை முடித்தார். இந்தியா ஏ அணியில் தேவ்தத் படிக்கல், பிரிதிவி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ஹனுமா விஹாரி (கேப்டன்), இஷான் கிஷன், சர்பராஸ் கான், கிருஷ்ணப்பா கவுதம், சவுரவ் குமார், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், இஷான் போரெல் ஆகியோர் ஆடுகின்றனர்.
தென் ஆப்பிரிக்கா தொடருக்கு இந்திய அணி செல்லும் போது நிச்சயம் நவ்தீப் சைனி, தீபக் சாகர் ஆகியோர் பெயர் ஆடும் லெவனில் பரிசீலிக்கப்படும். பும்ரா, சிராஜ், ஷமி, சைனி/தீபக் சாகர் என்று கோலி முடிவெடுக்க வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் பெஞ்ச் ஸ்ட்ரெந்த் வேறு எந்த அணியிலும் இல்லாத அளவுக்கு முன்னேறியதற்குக் காரணம், தேசிய கிரிக்கெட் அகாடமி, அதனை வழிநடத்திய ராகுல் திராவிட் என்றால் அது மிகையல்ல.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket