HOME»NEWS»SPORTS»cricket india a team won the series against australia what is this ponting rues series loss mut

ஏ-டீம வச்சு இந்தியா நம்மள ஊதிட்டாங்களே...அதுவும் பிரிஸ்பன்லயே காலி பண்ணிட்டாங்களே- ரிக்கி பாண்டிங் கதறல்

மைன்ட் கேம் ஆடிப் பழக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணிக்கு மைதான கேம் மறந்து விட்டது என்பது தோல்விக்குப் பிறகே தெரியவந்துள்ளது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கின்றனர்.

ஏ-டீம வச்சு இந்தியா நம்மள ஊதிட்டாங்களே...அதுவும் பிரிஸ்பன்லயே காலி பண்ணிட்டாங்களே- ரிக்கி பாண்டிங் கதறல்
ரிக்கி பாண்டிங்.
  • Share this:

பார்டர்-கவாஸ்கர் டிராபியை 2வது முறையாக அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து கைப்பற்றியது குறித்து முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அடிலெய்ட் டெஸ்ட்டில் 36 ஆல் அவுட் என்றவுடன் பாண்டிங் உட்பட அனைவரும் இந்திய அணியை ஊற்றி மூடினர், 4-0 என்றனர், ஒயிட் வாஷ் என்றனர், ஊஹூம் இந்தியாவால் முடியாது என்றனர். கேட்டால் இவை மைன்ட் கேம் என்பார்கள்.

மைன்ட் கேம் ஆடிப் பழக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணிக்கு மைதான கேம் மறந்து விட்டது என்பது தோல்விக்குப் பிறகே தெரியவந்துள்ளது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கின்றனர்.



தங்கள் அணியில் உள்ள கோளாறுகளைப் பற்றிப் பேசாமல், களையாமல் புஜாரா இப்படி அறுவை போடக்கூடாது, ரன்களை வேகமாக எடுக்க வேண்டும் என்றெல்லாம் பேசினார் பாண்டிங். கடைசியில் மைன்ட் கேம் ஆஸ்திரேலிய அணியின் ‘மண் கேம்’ ஆகி விட்டது.

இந்நிலையில் பாண்டிங் புலம்பியதாவது:

கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட்டுடன் சென்று விட்டார். முக்கிய வீரர்கள், பவுலர்கள் காயமடைந்து விட்டனர். மொத்தமாக 20 வீரர்கள் இந்திய அணியில் களமிறங்கினர்.

ஒரு விதத்தில் இந்திய ஏ அணியைத்தான் களமிறக்கினார்கள். இருப்பினும் சொந்த மண்ணில் இந்திய அணியை தோற்கடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

2018-19 தொடரில் இந்தியா வென்ற போது ஸ்மித் இல்லை, வார்னர் இல்லை என்றோம். ஆனால் இந்தமுறை ஆஸ்திரேலியா முழு பலத்துடன் களமிறங்கியது. இருப்பினும் தோல்வி என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

வலைப்பயிற்சியில் பந்து வீச அழைத்து வந்தவர்களை வைத்து தொடரையே வென்று விட்டார்கள் இந்தியர்கள். இவ்வளவு பலவீனமாகவா போய் விட்டோம். இந்தியா ஏ அணியை விட நாம் மோசமாகி விட்டோம்.

இளம் ரத்தங்களைக் கொண்டு ஆஸி. மண்ணில் தொடரை வெல்லும் திறமை அவர்களிடத்தில் உள்ளது, அதுவும் நமது கோட்டையான பிரிஸ்பனிலும் வென்றார்கள். இப்படி நடக்க விட்டிருக்க கூடாது, என்றார்.
Published by:Muthukumar
First published: