முகப்பு /செய்தி /விளையாட்டு / ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக இரட்டை சதம்… கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த இஷான் கிஷன்…

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக இரட்டை சதம்… கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த இஷான் கிஷன்…

இஷான் கிஷன் - கிறிஸ் கேல்

இஷான் கிஷன் - கிறிஸ் கேல்

வெறும் 136 ரன்களை பந்துகளை எதிர்கொண்டு 210 ரன்களை அதிரடியாக இஷான் கிஷன் எடுத்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக இரட்டை சதத்தை விளாசி, கிறிஸ் கெயிலின் சாதனையை இளம் இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, தொடரையும் இழந்தது. இந்நிலையில் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 409 ரன்களை குவித்து இருக்கிறது. அதிகபட்சமாக இளம் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் 210 ரன்களை குவித்தார். இதில் 10 சிக்சர்களும் 24 பவுண்டரிகளும் அடங்கும். வெறும் 136 ரன்களை பந்துகளை எதிர்கொண்டு 210 ரன்களை அதிரடியாக இஷன் கிஷன் எடுத்திருக்கிறார்.

வங்கதேசத்தை வெளுத்தெடுத்த இந்தியா… 409 ரன்கள் குவிப்பு

அவர் 126 பந்துகளில் 200 ரன்கள் எடுத்து இரட்டை சதத்தை பதிவு செய்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், மிகக் குறைவான பந்துகளில் அடிக்கப்பட்ட இரட்டைச் சதமாக இந்த சாதனை இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக 85 பந்துகளில் அவர் சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 138 பந்துகளில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் அடித்த இரட்டைச்சதம் தான் இதுவரையில் சாதனையாக இருந்து வந்தது. இந்த அதிவேக இரட்டைச் சத சாதனையை அவர், கடந்த 2015 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஏற்படுத்தியிருந்தார்.

Ind vs Ban | டி20 ரேஞ்சில் டாப் கியரில் எகிறிய இஷான் கிஷான்... இரட்டை சதம் விளாசி சாதனை

இந்நிலையில் இஷான் கிஷன் இந்த சாதனையை இன்றைக்கு முடிவுக்கு கொண்டு வந்து, புதிய ரிக்கார்டை ஏற்படுத்தியிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரைத் தொடர்ந்து 200 ரன்களை அடித்த 4வது இந்திய வீரர் என்ற பெயரை இஷான் கிஷன் பெற்றிருக்கிறார்.

சர்வதேச அளவில் ஏழாவது வீரராக இந்த சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களை தவிர்த்து நியூசிலாந்தின் மார்டின் குப்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில், பாகிஸ்தானின் பகர் ஜமான் ஆகியோர் இரட்டைச் சதங்களை பதிவு செய்துள்ளனர்.

First published:

Tags: Cricket