HOME»NEWS»SPORTS»cricket indaia vs australia virat kohli catch today watch diving catch to dismiss cameron green in adelaide test vjr

Ind vs Aus | தூக்கி அடித்த பந்தை பாய்ந்து பிடித்த விராட்... அடிலெய்டை அதிரவைத்த கேட்ச் - வீடியோ

India vs Australia | Virat Kohli Catch | ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான கேட்ச் பிடித்து விராட் கோலி அசத்தி உள்ளார்.

Ind vs Aus | தூக்கி அடித்த பந்தை பாய்ந்து பிடித்த விராட்... அடிலெய்டை அதிரவைத்த கேட்ச் - வீடியோ
விராட் கோலி
  • Share this:

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை நிதானாமாக எதிர்கொண்ட இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி 74 ரன்கள் எடுத்திருந்த போது ரன்அவுட்டாகினார்.

இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் தொடங்கிய உடன் இந்திய அணி 11 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் எடுத்திருந்தது.

இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆரம்பித்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆமை வேகத்தில் ஆஸ்திரேலிய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி 65 ரன்கள் எடுத்திருந்த போது 4 விக்கெட்களை பறிக்கொடுத்தது.



ஆஸ்திரேலிய அணியின் 6-வது வீரராக களமிறங்கிய கேமரூன் கீரின் விக்கெட்டை ரவிசந்திரன் அஸ்வின் வீழ்த்தினார். அஸ்வின் பந்தை தூக்கி அடிக்க கீரின் முயன்றார். அந்த பந்தை பாய்ந்து வந்து விராட் கோலி அபாராமான கேட்ச் பிடித்தார்.

ஆஸ்திரேலிய அணி தேநீர் இடைவெளியின் போது 92 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. இந்திய அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும், பும்ரா 2 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: