மகளிர் உலகக்கோப்பை: ஸ்நேஹ் ரானாவின் ஆல் ரவுண்ட் அட்டகாசம்- வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை இந்தியா தக்கவைப்பு
மகளிர் உலகக்கோப்பை: ஸ்நேஹ் ரானாவின் ஆல் ரவுண்ட் அட்டகாசம்- வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை இந்தியா தக்கவைப்பு
வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி.
நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற மகளிர் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 22-வது ஆட்டத்தில் வங்கதேச மகளிர் அணியை இந்திய மகளிர் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தட்டித்தூக்கியது, இதனையடுத்து வென்றேயாக வேண்டிய இந்தப் போட்டியில் வென்று அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டது. புள்ளிகள் அட்டவணையில் 3ம் இடத்தில் உள்ளது.
நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற மகளிர் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 22-வது ஆட்டத்தில் வங்கதேச மகளிர் அணியை இந்திய மகளிர் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தட்டித்தூக்கியது, இதனையடுத்து வென்றேயாக வேண்டிய இந்தப் போட்டியில் வென்று அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டது. புள்ளிகள் அட்டவணையில் 3ம் இடத்தில் உள்ளது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 229/7 என்று முடிய விரட்டிய வங்கதேச மகளிர் அணி 40.3 ஓவர்களில் 119 ரன்களுக்குச் சுருண்டது.
டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஸ்மிரிதி மந்தனா (30), ஷஃபாலி வெர்மா (42) அருமையான தொடக்கம் கொடுத்து 15 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்தனர். அப்போது மந்தனா நிஹிதா அக்தரிடம் அவுட் ஆனார்.
இவர் சென்றவுடனேயே அருமையாக ஆடி 6 பவுண்டரி 1 சிக்சருடன் 42 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த பெண் ‘சேவாக்’ ஷபாலி வெர்மா ரீத்து மோனி பந்தில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். ஷபாலி வெர்மா ஆட்டமிழந்த அடுத்த பந்தே கேப்டன் மிதாலி ராஜும் மோனியிடம் டக் அவுட் ஆகி வெளியேற இந்திய அணி 74/3 என்று தடுமாறியது.
பிறகு யஸ்திகா பாட்டியா (50), ஹர்மன்பிரீத் கவுர் (14) இணைந்து ஸ்கோரை 108 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். 28வது ஓவரின் 3வது பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் வெளியேறினார். பிறகு விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ், பாட்டியாவுடன் இணைந்து 11 ஓவர்களில் 55 ரன்கள் சேர்த்து ஸ்கோரை 162 ரன்களுக்கு உயர்த்தினர். யாஸ்திகா பாட்டியா 80 பந்துகளில் 2 பவுண்டரிகள் உடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது 176/6 என்று ஆனது.
ஆனால் ரிச்சா கோஷ் - 26, பூஜா வஸ்ட்ராகர்- 30, ஸ்நேஹ் ரானா-27 ஆகியோர் பொறுப்புடன் ஆடி ஸ்கோரை 229 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். வங்கதேச பவுலர் ரீது மோனி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நிகிதா அக்தர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
230 ரன்கள் இலக்கை எதிர்த்து வங்கதேச மகளிர் அணி ஒரு கட்டத்தில் கூட எழும்பவில்லை, காரணம் ம் ஜுலன் கோஸ்வாமி, ஸ்நேஹ் ரானாவின் அற்புத பந்துவீச்சுக்கு 17.2 ஓவர்களிலேயே 35/5 என்று சரிவு கண்டது. பிறகு லதா மோண்டல் - 24, சல்மா காத்தூன் (32) சேர்ந்து கொஞ்சம் நின்று பார்த்தனர். ஆனால் ஒன்றும் முடியவில்லை, அந்த அணி 40.3 ஓவர்கள் ஆடி 119 ரன்களிலேயே சுருண்டு படுதோல்வி கண்டது.
இந்தியா தரப்பில் ஸ்னேஹ் ரானா 4 விக்கெட்டுகளையும் ஜுலன் கோஸ்வாமி 2 விக்கெட்டுகளையும் பூஜா வர்ஸ்த்ராக்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகியாக உண்மையில் ஆல்ரவுண்ட் திறமை காட்டிய ஸ்நேஹ் ரானாவுக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் 50 ரன்கள் எடுத்த பாட்டியாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.