Home /News /sports /

பரிதாப ஜிம்பாப்வேயை 3-0 என்று வெல்லும் வாய்ப்பு- இன்று 3வது போட்டி

பரிதாப ஜிம்பாப்வேயை 3-0 என்று வெல்லும் வாய்ப்பு- இன்று 3வது போட்டி

 இன்று 3வது ஒருநாள் போட்டி

இன்று 3வது ஒருநாள் போட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கி விட்டது. இந்த நிலையில் இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கி விட்டது. இந்த நிலையில் இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.

    இரண்டு ஆட்டங்களிலும் 50 ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்காத ஜிம்பாப்வே 189 மற்றும் 161 ரன்கள் வீதம் எடுத்து முடங்கிப்போனது. பந்து வீச்சில் முதல் ஆட்டத்தில் தீபக் சாஹரும், 2-வது ஆட்டத்தில் ஷர்துல் தாக்குரும் தலா 3 விக்கெட் வீழ்த்தி மிரட்டினர். ஆனால் 2வது போட்டியில் லேசாக ஸ்விங் ஆவது போல் இருந்தாலே இந்திய பேட்டர்கள் சொதப்புவார்கள் என்பதை ஜிம்பாப்வேயின் சாதாரண பவுலர்களும் நிரூபித்ததை கவனத்தில் கொண்டால் நல்லது.

    கே.எல்.ராகுல் பெரிய ஸ்டார் போல் இறங்கி கடைசியில் லேசாக இன்ஸ்விங் ஆன பந்துக்கு அக்ராஸ் த லைனில் ஆடி எல்பி ஆகிவெளியேறினார். ஷிகர் தவான் ஷார்ட் பிட்ச் பந்துக்கு இரையானார். இப்படி 2வது போட்டியில் கொஞ்சம் ஜிம்பாப்வே இந்திய அணிக்கு எதிராக போராடி சில கேள்விகளை எழுப்பவே செய்தது. ஷுப்மன் கில்லும் அன்று அவர் இஷ்டத்துக்கு ஆட முடியவில்லை. இஷான் கிஷனும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடரை ஏற்கெனவே வென்று விட்டதால் இன்று வாய்ப்பளிக்கப்படாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஷிகர் தவானுக்குப் பதில் ருதுராஜ் கெய்க்வாட் வரலாம். வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் சேர்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் ஷாபாஸ் அகமது, வேகப்பந்து வீச்சில் ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெறலாம் என்று தெரிகிறது.

    முதல் இரு ஆட்டங்களில் டாஸ் ஜெயித்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த இந்திய கேப்டன் லோகேஷ் ராகுல், இன்றைய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்தால் தங்களது பேட்டிங் திறனை பரிசோதித்து பார்க்க முதலில் பேட்டிங்குக்கு முன்னுரிமை அளிக்கலாம்.

    இன்று இந்திய அணி வருமாறு: கே.எல்.ராகுல் கேப்டன், ருதுராஜ் கெய்க்வாட், திரிபாதி, ஹூடா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஆவேஷ் கான், ஷாபாஸ் அகமது, பிரசித் கிருஷ்ணா.

    ஆட்டம் 12.45 மணிக்குத் தொடங்குகிறது. மைதானம்: ஜிம்பாப்வே ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Indian cricket team, Team India, Zimbabwe

    அடுத்த செய்தி