Home /News /sports /

2-வது ஒருநாள்: கொரோனா காரணமாக 2 முக்கிய வீரர்கள் இல்லை- இந்திய லெவன்

2-வது ஒருநாள்: கொரோனா காரணமாக 2 முக்கிய வீரர்கள் இல்லை- இந்திய லெவன்

இந்திய அணி

இந்திய அணி

2-வது ஒருநாள் போட்டி உத்தேச லெவன் - ரோகித் சர்மா, ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, ஷர்துல் தாக்குர்/ தீபக் சாஹர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, யஜுவேந்திர செகல், வாஷிங்டன் சுந்தர்

    மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2-வது ஒருநாள் போட்டி நாளை, புதன் கிழமை நடைபெறுவதை அடுத்து கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து விட்டாலும் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் 2வது போட்டியிலும் ஆட மாட்டார்கள் என்று இந்திய அணி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மற்றும் மிடில்-ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் கொரோனா பாசிட்டிவ் என்பதால் முதல் போட்டியில் ஆடவில்லை. ஆனால் இருவருக்கும் மீண்டும் சோதனை செய்யப்பட்டதில் நெகெட்டிவ் என்று வந்ததால் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், புதன் கிழமை அகமதாபாத்தில் நடைபெற உள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர்கள் விளையாடமாட்டார்கள். இருவரும் பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பின் கீழ் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் லேசான பயிற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் தனிமையில்தான் உள்ளார்.

    ஸ்ரேயாஸ் மற்றும் ஷிகர் தவான் இருவரும் நெறிமுறையின்படி லேசான பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், அவர்கள் 2வது போட்டியில் ஆடுவது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு மருத்துவக் குழு அவர்களைக் கண்காணிக்கும், என்று பிசிசிஐ வட்டாரம், தி இந்துவிடம் கூறியது, வாரியம் விஷயங்களை அவசரப்படுத்த விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

    முன்னதாக, ரோஹித் சர்மா கேப்டனாக திரும்பியதை அடுத்து, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவர் இஷான் கிஷானுடன் இணைந்து இந்திய அணிக்கு 84 ரன்களுக்கு சிறந்த தொடக்கத்தைக் கொடுத்தார். இதற்கிடையில், மயங்க் அகர்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் வலைப்பயிற்சியில் உள்ளனர். சகோதரியின் திருமணத்தின் காரணமாக ராகுல் முதல் ODI இல் இருந்து விலக்கப்பட்ட நிலையில், கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட நான்கு வீரர்களுக்கு பதிலீடாக அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

    மயங்க் மற்றும் ராகுல் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு திரும்பி வருவது அணியைப் பலப்படுத்துகிறது. , யார் விளையாடுவார்கள் அல்லது விளையாட மாட்டார்கள் என்பது அணி நிர்வாகத்தின் முடிவாகும். அவர்கள் மீண்டும் வந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக பேட்டிங் வீரர் சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    நாளை நடைபெறும் 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இப்படியிருக்கலாம்:

    ரோகித் சர்மா, ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, ஷர்துல் தாக்குர்/ தீபக் சாஹர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, யஜுவேந்திர செகல், வாஷிங்டன் சுந்தர்
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ind vs WI ODI, India vs west indies, IndvsWI

    அடுத்த செய்தி