Home /News /sports /

INDvsWI | சேப்பாக்கத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிக்கெட் விற்பனை மந்தம்..! காரணம் என்ன?

INDvsWI | சேப்பாக்கத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிக்கெட் விற்பனை மந்தம்..! காரணம் என்ன?

சேப்பாக்கம்

சேப்பாக்கம்

INDvsWI |சென்னையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறும் அன்று மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாலும் ரசிகர்கள் டிக்கெட் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - மேற்கிந்தி தீவுகள் அணி மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மந்தமாக நடைபெற்று வருகிறது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டி திருவனந்தாபுரத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.

இதனிடையே இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது.

சேப்பாக்கத்தில் ரசிகர்கள் ஆவலுடன் டிக்கெட் வாங்கி சென்றாலும் எதிர்பார்த்த கூட்டம் இல்லாமல் டிக்கெட் விற்பனை மந்தமாகவே நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங தோனி அணியில் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் சென்னையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறும் அன்று மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாலும் ரசிகர்கள் டிக்கெட் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கும் நேரத்தில் தான் சென்னையில் கிரிக்கெட் போட்டியை நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி குறைந்தபட்சம் ரூ.1200 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன் குறைந்தபட்சமாக 500, 750 ரூபாய்க்கு விற்ற டிக்கெட்கள் ஜிஎஸ்டி காரணமாக 1200 ரூபாய்க்கு விற்கப்படுவதும் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
Published by:Vijay R
First published:

Tags: Chepauk, India vs Westindies

அடுத்த செய்தி